பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 பதினெண் புராணங்கள் “உங்களுக்கெல்லாம் இராமாயணக் கதை நன்கு தெரியும். இராமன் குரங்குப் படையுடன் ராமேஸ்வரத்தில் தங்கி நளன் என்ற சிற்பியின் உதவியால் இலங்கைக்குப் பாலம் கட்டிய வரலாறு உங்களுக்குத் தெரியும். இந்தப் பாலம் சக்கர தீர்த்தத்தின் பக்கத்தில் உள்ளது. சக்கர தீர்த்தம் என்ற பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? இங்கு தங்கியிருந்த காலவ முனிவருக்குப் பல இடையூறுகள் செய்த அரக்கனைத் தம் சக்கரத்தால் கொன்றார். அதனால் இது சக்கரத் தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. இதன் பிறகு காலவ முனிவர் மகள் தன் தகப்பனுக்குப் பூ விறகு முதலியவற்றைச் சேகரிக்கக் காட்டிற் குள் வந்தபொழுது, சுதர்ஸன, சுகர்ண என்ற வித்யாதரர்கள் அவளைப் பார்த்தனர். சுதர்ஸன என்பவன், அவளிடம் வந்து, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். என்னைத் திருமணம் செய்து கொள் என்றான். அப்பெண் நான் சுதந்திரமானவள் அல்லள். என் தந்தை காலவ முனிவரின் பாதுகாப்பில் இருக்கிறேன். நீ தேவையென்றால் அவரை வந்து பார்த்து, அவரிடம் உன் வேண்டுகோளைத் தெரிவிப்பாயாக’ என்று கூறினாள். அதற்கு உடன்படாத சுதர்ஸ்ன அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு புறப்பட்டான். அந்தப் பெண் வாய்விட்டு அலறினாள். அதைக் கேட்டு காலவர் முதலிய முனிவர்கள் வெளியே வந்தனர். இரண்டு வித்யாதரர்கள் தன் பெண்ணை இழுத்துச் செல்வதைக் கண்ட காலவர், சுதர்சனனைப் பார்த்து, மூடனே! வித்யாதரன் என்பதால் இப்படிப்பட்ட அட்டூழியங்கள் செய்யலாம் என்று நினைத்து விட்டாயா? தனியே உள்ள பெண்ணை அடாத செயல் செய்த நீ பிசாசாக மாறி உலகைச் சுற்றி வருவாயாக. உனக்கு விடுதலையே இல்லை! என்று சபித்துவிட்டு, சுகர்ணாவைப் பார்த்து தவறு நேரும்பொழுது, நீ அதைக் கண்டிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாய். நீ செய்த குற்றம், அதைப்போல அவ்வளவு