பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 31 உலக பந்தத்தில் இருந்து விடுபட்ட நீங்கள் இந்தப் பொருட்களை வைத்துக் கொண்டிருப்பது சரியில்லை. மேலும் அசுரர்கள் அவர்கள் விரோதிகளான தேவர்களின் ஆயுதங் களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றறிந்தால், உங்கள்மேல் விரோதம் பாராட்டுவார்கள்,” என்று கூறினாள். அதுகேட்ட முனிவர் "நீ சொல்வது சரிதான். ஆனால் வாக்குக் கொடுத்து விட்டேன். அதை மீற முடியாது” என்று கூறிவிட்டார். இந்நிலையில் ஆயுதங்கள் ஒளி இழப்பதை அறிந்த முனிவர் அவற்றை கங்கை நீரில் கழுவி அந்நீரைக் குடித்துவிட்டார். ஆயுதங்களின் சக்தி முழுவதும் அவரது உடம்பில் சேர்ந்து விட்டது. பல ஆண்டுகள் ஒடி மறைந்தன. திடீரென்று ஆசிரமத் திற்கு வந்த தேவர்கள், "முனிவரே! அசுரர் கை ஓங்கிவிட்டது. எங்கள் ஆயுதங்களைக் கொடுங்கள்,” என்று கேட்டனர். முனிவர் நடந்தவற்றைக் கூறி “நான் யோகத்தால் என் உயிரைப் போக்கிக் கொள்கிறேன். என் உடம்பில் உள்ள முதுகெலும்பைக் கொண்டு நீங்கள் புதிய ஆயுதம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறி அவர் அப்படியே உயிரை விட அவர் எலும்பைக் கொண்டு விஸ்வகர்மா 'வஜ்ராயுதம் என்ற ஆயுதத்தைப் படைத்தான். அதை எடுத்துக்கொண்டு தேவர்கள் போய்விட்டனர். அச்சமயம் லோபாமுத்திரை அங்கு இல்லை. சிலகாலம் கழித்து மீண்டும் வந்த அவள் நடந்தவற்றை அறிந்து தன் குழந்தை பிறக்கும் வரை தன் உயிரை வைத்துக் தான் பெற்ற மகனை ஒர் அத்திமரத்திடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். அத்திமரத்தால் வளர்க்கப்பட்ட மகன் அத்தி மரத்தின் வட மொழிப் பெயராகிய பிப்பலா என்ற பெயரைப் பெற்றான். ஒருமுறை தன் பெற்றோர் யார் என்று அத்தி மரத்தைக் கேட்க, அத்தி மரம் நடந்தவற்றைக் கூறிற்று. கடுங்கோபம் கொண்ட பிப்பலா, தேவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவனை நோக்கித் தவம்