பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

583 பதினெண் புராணங்கள் பார்வதி, சிவனைப் பார்த்து, எப்படியாவது ஒரு வீடு கட்டிக் கொண்டு மற்றவர் போல நாமும் வாழக் கூடாதா என்றார். அதற்கு திறந்த வெளியில் வாழ்வதுதான் என்னுடைய முடிவு. நீ வெயில் கொடுமையில் அவதிப்படுகின்றாய் என்றால், காடுகளில் மரத்தடியில் சென்று வாழலாம் வா என்று கூறிப் பார்வதியை அழைத்துக் கொண்டு, மரங்களின் நிழலில் வாழத் தொடங்கினார். கோடை போய், மழைக் காலம் வந்தது. மேகங்கள், இடியையும், மின்னலையும் உண்டாக்கின. மயில்கள் ஆடத் தொடங்கின. சோவென்று பெய்த மழையில் மலை அருவிகள் வீழ ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிற்று. இப்பொழுது பார்வதி சிவனைப் பார்த்து நாமும் எல்லோரையும் போல வாழ வேண்டாமா? அழகிய வீட்டைக் கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தால் இந்த மழையில் நனைந்து குளிரில் வாடும் நிலைமை ஏற்படாதே’ என்று கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட சிவன், “பார்வதி, நிலைமை புரியாமல் பேசுகிறாய். கட்டுவதற்கு ஒரு துணிகூட இல்லாமல் புலித்தோலை அணிந் திருக்கிறேன். பொன்நகை என்று சொல்வதற்கு எதுவு மில்லாமல் இந்தப் பாம்புகளை அணிந்திருக்கிறேன். இந்த நிலையில் வீடு கட்டப் பொருளுக்கு எங்கே போவது, வா! மழைக்காலம் முடியும் வரை மேகங்களில் சென்று வாழலாம்" என்று கூறிப் பார்வதியையும் அழைத்துக்கொண்டு மேகங் களில் வாழப் புறப்பட்டார். வடமொழியில் ஜீமுதா என்றால் மேகம் என்று பொருள்படும். மேகத்தில் வாழ்ந்ததால் சிவனுக்கு 'ஜீமுதகேது என்ற பெயர் வந்தது. பிரம்மனின் வெற்றி முன்னொரு காலத்தில் பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. சூரியன், சந்திரன் முதலிய