பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 பதினெண் புராணங்கள் அவ்வாறு செய்தார். அது திரிசூலமாகையால் விஷ்ணுவின் கையில் மூன்று காயங்கள் ஏற்பட்டு மூன்றிலிருந்தும் இரத்தம் கொட்டிற்று. முதல் காயத்தில் இருந்து சொரிந்த இரத்தம் நட்சத்திரங்களுடன் சென்று சேர்ந்து விட்டது. இரண்டாவது காயத்தில் இருந்து வந்த இரத்தம் பூமியில் விழுந்ததால் அதிலிருந்து அத்ரி, துர்வாசர் தோன்றினர். அத் துர்வாசர் பிறந்த கதை மற்ற புராணங்களில் வேறுவிதமாகக் கூறப் பட்டுள்ளது, மூன்றாவது காயத்தில் இருந்து வந்த இரத்தம் சிவனுடைய நெற்றியில் பட அங்கிருந்து ஒரு வீரன் தோன்றினான். கரிய நிறமுடைய அவ்வீரன் வில்லும் அம்பும் வைத்திருந்தான். அந்த வீரன் சிவனைப் பார்த்து, 'நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். பிரம்மன் உண்டாக்கிய வீரனைக் கொல்வாயாக என்று சிவன் கட்டளை இட்டார். இருவரும் ஆயிரம் தேவருடன் போர் புரிந்தனர். இறுதியில் பிரம்மன் வீரன் வெற்றி பெற்றான். வெற்றி பெற்ற அவன் சூரிய மண்டலத்தில் சென்று மறைந்து விட்டான். சிவன் வீரன் விஷ்ணுவின் விக்கிரகத்தில் கலந்து விட்டான். சிவனும், விஷ்ணுவும் துண்டிக்கப்பட்ட பிரம்மன் தலை, சிவனுடைய கையில் ஒட்டிக் கொண்டு கீழே விழ மறுத்தது. பிரம்மன் பிராமணர் ஆகையினால், சிவனை பிரம்மஹத்தி தோஷம் வலுவாகப் பற்றிக் கொண்டது. சிவன் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று குளிக்க பிரம்மஹத்தி தோஷம் காரணமாக தீர்த்தங்கள் வற்றி விட்டன. கடைசியாக விஷ்ணுவிடம் சென்று தன் குறையைச் சொன்னார் சிவன். வாரணா என்ற ஆறும், அசி என்ற ஆறும் சங்கமிக்கும் இடத்தில் வாரணாசி என்ற ஊர் உள்ளது. அதில் தச அஸ்வமேதா என்ற ஊர் உள்ளது. அங்கு சென்று நீ பிரார்த்தனை செய்தால் கபாலம் நீங்கும் என்று கூறினார். சிவன் அவ்வாறே செய்ய கபாலம் கையை விட்டு நீங்கியது.