பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 591 நீண்ட காலம் கபாலம் கையில் இருந்ததால் சிவனுக்குக் கபாலி என்றும், அந்த இடத்திற்குக் கபால மோட்சனா என்ற பெயரும் நிலைத்தது. தட்சயக்ளும் : புதிய கோணம் (ஏனைய பல புர7ணங்களிலும் தட்சயக்ஞம் செ7வ்வப் பட்டிருப்பத7ல் அவற்றினின்று மாறுபடும் பகுதிகளை மட்டும் இங்கே கொடுக்கிறோம்.) தட்சன் யக்ஞம் செய்வதையும், சிவன் அழைக்கப் படவில்லை என்பதையும், தட்சன் மகளும் சிவன் மனைவியு மாகிய சதி தன் தங்கை மகள் விஜயாவின் மூலம் அறிந்து அங்கேயே உயிரை விட்டு விட்டாள். அங்கிருந்த சிவனின் கோபத்தில் கரிய நிறமுடைய வீரபத்திரன் தோன்றினார். விஜயாவையும் சிவன் தோற்றுவித்தார். வீரபத்திரன், விஜயா வுடன் சேர்ந்து தட்சன் யாகசாலைக்குச் சென்று அதனை அழிக்க முற்பட்டனர். அதனைத் தடுக்க வந்த விஷ்ணுவுடன் வீரபத்திரன் போர் செய்தார். விஷ்ணுவுடைய சக்கரம் வீர பத்திரனுடைய சூலாயுதத்தை எதிர்த்து நிற்க முடியாததால், விஷ்ணு வீரபத்திரனுடன் மற்போர் புரிந்தார். மற்போரில் விஷ்ணுவிடம் தோற்ற வீரபத்திரன் சிவனிடம் வந்தார். சிவன் விஷ்ணுவிடம் சண்டை போட விஷ்ணு தோற்று ஒடிவிட்டார். பிறகு அங்கிருந்த முனிவர்களை எல்லாம் வீரபத்திரன் தண்டித் தார். புஷா என்ற முனிவர் காலைப் பிடித்து ஆகாயத்தில் சுழற்றினார். புஷாவின் பற்களை எல்லாம் உடைத்தார். பகா என்ற முனிவரின் கண்களைத் தோண்டினார். யாகம் இப்படி முடிந்ததால் யாகமே ஒரு மான் வடிவெடுத்து ஆகாயத்தில் ஒடத் தொடங்கியது. யாக சாலையில் இருந்த சிவ உருவம் இரண்டாகப் பிளந்தது. ஜடாபாரத்தோடு கூடிய ஒரு பகுதியாக சாலையில் தங்கிவிட்டது. மறுபகுதி பாசுபதாஸ்திரம் பூட்டிய