பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 பதினெண் புராணங்கள் மலைக்கு வந்து சிவன் நின்ற காட்சி கண்டனர். லிங்கத்தின் முடி கற்பனைக்கடங்காத உயரத்தில் இருந்தது. அப்படி யானால் அதனுடைய அடியும் வெகுதூரம் சென்றிருக்க வேண்டும் என்று பேசிக் கொண்ட பிரம்மா, விஷ்ணு இருவருமே எப்படியாவது லிங்கத்தின் அடியையும் முடியையும் கண்டு வரவேண்டும் என்று விரும்பினர். உடனே பிரம்மன் தன் வாகனமாகிய அன்னத்தின் மேல் ஏறிக் கொண்டு உயர உயரப் பறந்து சென்றார். விஷ்ணு தன் வாகனமாகிய கருடனில் ஏறிக்கொண்டு கீழ்லோகங்கள் சென்றார். எவ்வளவு உயர்ந்து பறந்தும், எவ்வளவு தாழ்ந்து கிடந்தும் இருவரும் லிங்கத்தின் முடியையோ, அடியையோ காண முடியவில்லை. வெற்றி அடையாத இருவரும் ஒன்று கூடி சிவனை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். சிவன் அங்கே தோன்றினார். இவர்களுக்குப் பின்னே கந்தர்ப்பன் என்று சொல்லப்படும் மன்மதனைப் பார்த்தார். உடனே அவனது வில்லை ஒடித்து அவனையும் அழித்து விட்டார். அவனது வடிவம் எரிக்கப் பட்டதால் வடிவமில்லாதவன் என்ற பொருளில் அனங்கன் என்ற பெயர் நிலைத்தது. உடனே சிவன் இமயத்திற்குச் சென்று தவம் செய்யப் போய்விட்டார். ஊர்வசி பிறந்த கதை புலஸ்தியர் நாரதரைப் பார்த்து நர, நாராயணர் நாரத கதையை எங்கே விட்டேன் என்று நினைவுக்குக் கொண்டு வாரும். நர, நாராயணன் இருவரும் மிகத் தீவிரமான தவத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்திரனால் அனுப்பப்பட்ட ரம்பையும் மதனனும் இவர்கள் எதிரே வந்து நர, நாராயணர் தவத்தைக் கலைக்க நினைத்தனர். கண்விழித்த நாராயண முனிவர் ஒரே நொடியில் இவர்கள் யார் என்பதையும், எதற்காக வந்துள்ளனர் என்பதையும் அறிந்து கொண்டார். சிரித்துக்