பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 597 மாலை ஆகிவிடவே முனிவர் பிரகலாதனைப் பார்த்து சூரியன் மறைந்த பிறகு சண்டை இடுவது தருமம் அன்று. நாளை பொழுது விடிந்தவுடன் போர் செய்யலாம் என்று கூற, பிரகலாதன் சென்று ஒய்வெடுத்துக் கொண்டு மறுநாள் காலை வந்தான். இப்பொழுது நாராயண முனிவர் போருக்கு வந்தார். ஆயுதங்கள் எதுவும் பயன்படாமல் போகவே, பிரகலாதன் கதாயுதத்தை எடுத்து நாராயண முனிவர் மண்டையில் அடித்தான். கதாயுதம் சுக்கு நூறாயிற்று. தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதறிந்த பிரகலாதன் விஷ்ணுவை தியானிக்க, விஷ்ணு தோன்றினார். 'நான் இவர்களை வெல்ல வேண்டும் என்று பிரகலாதன் கேட்க விஷ்ணு, இவர்களை யாரென்று நினைத்தாய். இவர்கள் என் அம்சமாவர். இவர்களை வெல்வது என்பது இயலாத காரியம் என்று கூறியவுடன், பிரகலாதன், "இவர்களை வெல்ல வேண்டுமென்று விரதம் பூண்டுள்ளேன். அது முடியாது என்றால் நான் என் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி யில்லை” என்றான். அதுகேட்ட விஷ்ணு, "இவர்களை ஆயுத பலத்தால் வெல்ல முடியாது என்றுதான் சொன்னேன். ஆன்ம பலத்தாலும், பக்தியாலும் இவர்களை நீ உன்னிடம் வருமாறு செய்து கொள்ளலாம்” என்று கூறினார். அதைக் கேட்ட பிரகலாதன் வில்லையும், அம்பையும் துர எறிந்துவிட்டு, நர, நாராயணர்களைப் பிரார்த்தனை செய்யத் துவங்கினான். அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, அவர் யார் என்று தெரியாமையால் அவரை ஏசியும், பாணத்தால் துன்புறுத்தியும் பல தவறுகளைச் செய்துவிட்டேன். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற நாராயண முனிவர் "உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, உங்களையும் விஷ்ணுவையும் என்றும் மறவாதிருக்க வேண்டும் என்று வேண்டினான். அங்ங்னமே ஆகட்டும்’