பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/626

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 . பதினெண் புராணங்கள் என்று முனிவர் கூறியவுடன் பிரகலாதன் தன் நாட்டிற்கு யாத்திரைக்குப் புறப்படுமுன் அந்தகன் என்னும் அசுர னிடம் அரசை ஒப்படைத்துவிட்டுப் பிரகலாதன் புறப்பட்டிருந் தான் அல்லவா? இப்பொழுது அந்தகன் வந்து அரசை ஏற்று ஆள வேண்டும் என்று கூறியவுடன் பிரகலாதன் எந்தப் பகுதியிலும் எனக்கு இப்பொழுது விருப்பமில்லை. நீயே இதனை ஆள்வாயாக என்று அவனிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்று அந்தகன் பிரகலாதனும், அந்தகனும் அண்ணன்-தம்பி மக்கள். ஹிரண்யாrன் மகன் அந்தகாசுரன். ஹிரண்யகசிபு மகன் பிரகலாதன். அந்தகன் முதலில் குருடனாக இருந்தாலும் பிறகு கண்களைப் பெற்று பிரகலாதன் கொடுத்த ஆட்சியை மேற் கொண்டான். அவன் பெரிய சிவபக்தன். ஆதலால் ஆட்சிக்கு வந்தவுடன் சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்து தேவர்கள், அசுரர்கள் ஆகிய யாராலும் தனக்குச் சாவு வரக்கூடாது என்றும், பூமியிலோ, நெருப்பிலோ தனக்கு இறப்பு வரக்கூடாது என்றும் பல வரங்களைப் பெற்று ஆளத் தொடங்கினான். வரங்களைப் பெற்ற தைரியத்தில், இந்திரனை ஜெயிக்க வேண்டும் என்ற வேகத்துடன் பிரோச்சனன் என்னும் படைத் தலைவனுடன் போருக்குப் புறப்பட்டான். இவன் வருவதை அறிந்த இந்திரன் தேவர்கள் படையை வரிசைப்படுத்தி நிறுத்தினான். இந்திரன் ஐராவதத்தின் மேலும், யமன் ஒரு எருமை மேலும், வருணன் கடற்பன்றி மேலும், கந்தர்வர்கள் நாகங்களின் மேலும், ருத்ரர்கள் வெள்ளைநிறக் காளைகள் மேலும், ஆதித்தியர்கள் குதிரைகள் மேலும், மருத்துக்கள்