பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் - 603 தேவர்கள் காத்யாயனியை வாழ்த்த, தேவைப்படும் பொழுது “நீங்கள் வேண்டினால் நான் மீண்டும் வருவேன்" என்று கூறி மறைந்தாள். உமாவின் தோற்றம் நாரதர், புலஸ்தியரைப் பார்த்து தேவையான பொழுது வருவேன்' என்று காத்யாயனி சொன்னாரே, எப்பொழுது மறுபடியும் வந்தார்?' என்று கேட்க, புலஸ்தியர் சொல்ல ஆரம்பித்தார். முன்னொரு காலத்தில் மகிஷனோடு சேர்ந்த அசுர குலத் தில் சும்ப நிசும்பர்கள் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். மிக்க வரபலம் உடைய அவர்கள் தங்கள் குலத்திற்கு எதிரிகளாகிய தேவர்களை வென்று, இந்திரனை விரட்டி எல்லையற்ற கொடுமைகள் செய்தனர். செய்வதறியாத தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று தங்கள் பரிதாப நிலையை விளக்கினர். அது கேட்ட விஷ்ணு, எங்களில் யாரும் இவர்களைக் கொல்ல முடியாத அளவிற்கு வரம் பெற் றுள்ளனர். நீங்கள் அனைவரும் சென்று குருக்ஷேத்திரத்தில் பிருதுதாகா என்ற தீர்த்தத்தில் உங்கள் முன்னோர்களைக் குறித்து வேண்டுங்கள். அவர்களிடத்தில் மேனகா என்ற பெண் இருக்கிறாள். அவளை இமவானுக்கு மணமுடித்தால், அவள் வயிற்றில் உமா என்ற பெயருடன், ஒரு பெண் தோன்றுவாள். அவள் சிவனை மணந்தால் கார்த்திகேயன் என்ற குழந்தையும் தோன்றுவான்’ என்று கூற குருக்ஷேத்திரம் எங்கே உள்ளது என்று தேவர்கள் வினாவினார்கள். குருக்ஷேத்திரம் பற்றி. இந்த குருக்ஷேத்திரமும், பிருத்துதாகா தீர்த்தமும் எங்கே உள்ளன என்று கேட்ட தேவர்களுக்கு விஷ்ணு சொல்ல ஆரம்பித்தார்.