பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/632

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 பதினெண் புராணங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்னர் ரிக்ஷா என்ற மன்னன் உலகை ஆண்டு வந்தான். அவனுடைய மகனாகிய சம்வரணன் வசிட்டரை குருவாக ஏற்றுக் கொண்டு எல்லா சாத்திரங்களையும், அரசியல் முறையையும் கற்று அறிந்தான். சம்வரணன் வேட்டைக்குச் சென்றபொழுது வைப்ரஜா என்ற வனப்பகுதியில் பல அப்ஸரஸ்கள் இருப்ப தைக் கண்டார். அவர்களுள் தப்தி என்பவளைக் கண்ட வுடன் அவள் மீது எல்லையில்லாக் காத்ல் கொண்டான். அதன் பயனாகக் குதிரை மீதிருந்த அவன் மயங்கிக் கீழே விழும்படி ஆயிற்று. அங்கு வந்த வித்யாதரர்கள் அவன் மயக்கத்தைத் தெளியவைத்து நாட்டிற்கு அனுப்பினர். என்றாலும் சம்வரணன் தான் சந்தித்த மங்கையை மறக்க வில்லை. தப்தி சூரியனின் மகளாவாள். இருவரும் மணம் புரிந்துகொள்ள விரும்பினர். விஷயத்தை அறிந்த வசிட்டர் சூரியனைக் கூப்பிட்டுப் பேசித் திருமணத்தை முடித்து வைத்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் குரு' என்ற பெயருடையவன். இவர்கள் பிறந்ததில் இருந்தே வசிட்டரிடம் கல்வி பயின்றனர். ஆதலின் பத்து வயதிற்குள் கற்க வேண்டிய அனைத்தும் கற்று விட்டான். குருவிற்குப் பதினாறு வயதாகும் பொழுது அவன் தந்தை, சுதாமா என்ற அரசனின் மகள் செளதாமினியை குருவுக்குத் திருமணம் செய்து வைத்தான். நாளாக நாளாக குருவின் மனத்தில் ஒர் ஆழமான எண்ணம் பிறந்தது. இதுவரை உலகத்தில் யாரும் செய்யாத காரியத்தைத் தான் செய்து, உலகம் புகழும்படித் தன் பெயரை நிலைநாட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். ஒவ்வொரு இடமாகத் தேடிச் சென்று, துவைத வனம் என்ற இடத்தை அடைந்தான். பிரம்மன் வந்து தங்குவதற்கு இந்த உலகில் ஐந்து இடங்கள் உண்டு. அவை வடபகுதியில், சரஸ்வதி நதியின் கரையில் உள்ள சமந்தபஞ்சகா