பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/635

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் - 607 இழிவாகப் பேசினான். சிறந்த விஷ்ணு பக்தனாகிய பிரகலாதன் மனம் நொந்து, “நீ உன் பலத்தை இழக்கப் போகிறாய்” என்று சாபமிட்டான். பயந்து போன வலி, பாட்டனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பிரகலாதன் அவனை மன்னித்தாலும் கொடுத்த சாபத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. (வாமணன் பிறந்தது, வவியின் யாகத்திற்கு வந்தது, மூன்றடி நிலம் கேட்டது, வலியை பாதாள வோகத்திற்கு அனுப்பியது ஆகியவை முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளன, நிலம் பெற்றுக் கொண்ட வாமனன் (விஷ்ணு வலியின் நேர்மை, தியாக மனப்பான்மை என்பவற்றை மெச்சி “வரப்போகும் மன்வந்திரத்தில் நீ இந்திரனாக ஆவாய்” என்று வரம் கொடுத்துச் சென்றார். வென இக்கதை முன் உள்ள புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது, இறந்து பாபலோகத்தில் இருந்த வெனாவைக் கொண்டு வந்து குருக்ஷேத்திரத்தில் உள்ள ஸ்தானு' தீர்த்தத்தில் அவனை நீராட்ட வேண்டும் என்று கருதிய வெனாவின் மகன் பிருத்து அச்செயலைச் செய்ய முற்படும் பொழுது, வானத்தில் அசரீரி ஒன்று கேட்டது. பிருத்துவே! மிகப் பாவியான உன் தந்தை இந்தத் தீர்த்தத்தில் இறங்கினால் தீர்த்தம் முழுதும் மாசு அடைந்துவிடும். அதற்கு பதிலாக நீ இறங்கி நீராடிவிட்டுக் கொஞ்சம் தண்ணிரை எடுத்து உன் தந்தை மேல் தெளித்தால் அவன் பாவம் நீங்கும் என்றது. பிருத்து அதைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாய் அங்கு வந்தது. அந்த நாய் பூர்வ ஜென்மத்தில் கோயில்களில் உள்ள பொருள்களைப் பாதுகாக்கும் காவலனாகப் பணி புரிந்தது. காவலனாக இருந்தும் அவனே கோயிலில் உள்ள