பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 611 கூறினார். யமனும், முராவிடம் சென்று விஷ்ணு அவனுடன் போர் புரியக் காத்திருப்பதாகவும், அவன் ஷிரோதா கடற் கபரக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினான். அது கேட்ட முரா அங்கு சென்று விஷ்ணுவிடம், "உன்னிடம் சண்டை யிட வந்துள்ளேன்” என்று கூறினான். அது கேட்ட விஷ்ணு முராவிடம், "நீ என்னுடன் சண்டையிட வேண்டுமானால் உன் இதயம் ஏன் வேகமாகத் துடிக்கிறது. நீ மிகவும் பயப்படுகிறாயா? அவ்வாறு பயந்து இருக்கும் உன்னுடன் நான் சண்டையிட விரும்பவில்லை” என்று கூறியவுடன், முரா விஷ்ணு கூறிய வார்த்தைகள் உண்மைதானா என்று அறிய தன் நெஞ்சின் மீது கை வைத்துப் பார்க்கவும், பிரம்மன் வரத்தின்படி உடனே இறந்து போனான். இறந்த அவன் உடலை விஷ்ணு தன் சக்கரத்தினால் துண்டாக்கினார். முரா என்ற அசுரனைக் கொன்றதால், அன்று முதல் விஷ்ணுவுக்கு 'முராரி என்ற பெயர் வழங்க ஆரம்பித்தது. அந்தகன் அந்தகன் என்ற அசுரனைப் பற்றி நாம் முன்பே அறிந்துள்ளோம். அந்த அசுரன் ஒருநாள் பிரகலாதனுடன் மந்தர மலைக்குச் சென்ற பொழுது, பார்வதியைக் கண்டு அவளை மணந்து கொள்ள விரும்பினான். இது கேட்ட பிரகலாதன், அந்தகனிடம், "பைத்தியக்காரனைப் போல் உளறாதே. பார்வதி சிவனின் மனைவியாவார். இந்த அகில உலகத்திற்கு அவரே தாய் ஆவார். ஆகையால் நீ உன் புத்தியை மாற்றிக் கொள்” என்றான். அதைக் காதில் போட்டுக் கொள்ளாத அந்தகன் பார்வதியைத் தாக்க நினைத்து அங்கு சென்றான். சிவனின் நண்பனாகிய நந்தி, அந்தகனைத் தடுக்க, கோபம் கொண்ட அசுரன் நந்தியைக் கலப்பையால் அடித்து மயக்கமுறச் செய்தான்.