பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 பதினெண் புராணங்கள் இதை அறிந்த பார்வதி ஒரே மாதிரி தோற்றம் தரக் கூடிய நூறு உருவங்கள் பெற்றார். அங்கு வந்த அந்தகன் உண்மையான பார்வதியைக் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்து போனான். இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட பார்வதி அவனை ஒர் ஆயுதத்தால் வீழ்த்தினார். அந்தகன் மயக்கமுற்றுக் கிடந்த சமயத்தில் பார்வதி அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டார். நீண்ட நேரத்திற்குப் பிறகு கண் விழித்த அந்தகன், பார்வதியைக் காணாமையால் ஏமாற்றத்துடன் பாதாளலோகம் திரும்பினான். சில நாட்கள் கழிந்தன. அந்தகன் பார்வதியை மறக்க முடியாததால், தன் படைகளைக் கூப்பிட்டு, பார்வதியைக் கவர்ந்து கொண்டு வருபவர்களுக்குத் தக்க பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறினான். இதைக் கேட்ட பிரகலாதன் அந்தகனிடம், "உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. பார்வதி உன் தாய் என்பதையும், சிவன் உன் தந்தை என்பதையும் நீ மறந்துவிட்டாய். இப்போது அதை உனக்குச் சொல்லப் போகிறேன்” என்று கூறி, சொல்லத் துவங்கினான் பிரகலாதன். ஒருமுறை சிவன் தனியே வீற்றிருக்கும் பொழுது, பார்வதி பின்புறமாக வந்து அவர் கண்களைப் பொத்தினார். அண்டங்கள் முழுவதும் இருண்டன. சிவனுடைய உடம்பி லிருந்து ஒரு பிள்ளை உதயமானான். ஹிரண்யாக்ஷன், பிள்ளை இல்லை என்று தவம் செய்தபொழுது சிவன் தோன்றி, "இந்த ஜென்மத்தில் உனக்குப் புத்திரபாக்கியம் இல்லை. என்னிடம் கண் இல்லாத ஒரு பிள்ளை இருக்கிறான். அவனை உன் மகனாக ஏற்று வளர்ப்பாயாக’ என்றார். சிவன் பார்வதி இருவருக்கும் மானசீகமாகப் பிறந்தவன் நீ பிறர் மனைவியை விரும்புவது பெருங்குற்றம். அல்லாமலும் உன் தாயின் இடத்தில் இருக்கின்றவளை விரும்புவது பெரும் பாதகம் என்று