பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 பதினெண் புராணங்கள் தர்மிஷ்டாவும் குழந்தை காணாமல் போய்விட்டதாக நினைத்துக் கொண்டாள். நிஷாகரன், அக்கிணற்றினுள் நீண்ட காலம் தங்கி இருந்தான். அதில் ஒரு மரம் நிறைந்த பழங்களுடன் இருந்ததால், அதனைத் தின்று வாழ்ந்து வந்தான். பத்து வருடங்கள் சென்றன. தர்மிஷ்டா ஒருநாள் அந்த வழியே செல்லும் பொழுது, ஒரு கல்லினை வைத்து அக்கிணற்றினை மூடி இருப்பது கண்டு, இதனை யார் கல் கொண்டு மூடி யிருக்கிறார்கள் என்று பெருங்குரலில் கேட்க, கிணற்றின் உள்ளிருந்த நிஷாகரா, “அன்னையே! தந்தைதான் இக்காரியம் செய்தார்” என்று கூறினான். இதைக் கேட்ட தர்மிஷ்டா மிகவும் வியப்படைந்து, தன் மகனை வீட்டிற்கு அழைத்து வந்தாள். நிஷாகரா தன்னுடைய பழங்கதையினை அவர்களுக்கு விவரித்தான். தன்னுடைய முற்பிறவிகளில் பெரிதும் பாவம் செய்ததின் காரணமாக நரகத்தில் பலகாலம் இருந்து, பிராமணன், புலி, கழுதை, பறவை, எருது ஆகிய பல பிறவிகள் எடுத்து இறுதி யாக நிஷாகரா என்ற பெயரில் கோஷகராவிற்கு மகனாகப் பிறந்தான். ஜதிஸ்மரா என்னும் பழம் பிறப்பு அறியும் சக்தி பெற்றிருந்தமையால், அவனுக்குப் பழம்பிறப்புகள் பற்றித் தெரிந்தன. பத்து வருடங்கள் கிணற்றினுள் இருந்த பொழுது தன் தவறுகளுக்காகப் பெரிதும் வருந்தியதில் பேசும் சக்தி யையும், கேட்கும் திறனையும் பெற்றான். இனி அவன் நேர்மையான வாழ்க்கை வாழப்போவதாகக் கூறினான். மற்ற புராணங்களைப் போலவே, வாமன புராணத்தின் சிறப்பைப் பற்றியும், அதனைப் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் புலஸ்திய முனிவர் நாரதருக்குக் கூறி முடித்தார்.