பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/653

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 625 கேட்டனர். அதற்கு விஷ்ணு, "இவரே லட்சுமி ஆவாள். சக்தி என்றும் அழைக்கப்படுவார். லட்சுமியின் உதவியுடனேயே நான் இந்த உலகத்தையும், அதில் உள்ள மக்களையும் என்னுடைய மாயையினால் உண்டாக்கி இருக்கிறேன். இலட்சுமி என்னிலிருந்து வேறுபட்டவள் அல்லள் என்றாலும், இலட்சுமியே எனக்கு எல்லா சக்தியும் கொடுப்பவள் என்று கூறி, இந்திரத்துய்மன் கதையை விஷ்ணு கூற ஆரம்பித்தார். வெகு காலத்திற்கு முன்னர், இந்திரத்துய்மன் என்ற அரசன் ஒருவன் இவ்வுலகை ஆண்டு வந்தான். இவ்வரசன் இறந்து, அடுத்த பிறவியில் ஒரு பிராமணனாகப் பிறந்தான். நேர்மையும், நல்லொழுக்கமும் கொண்ட இப்பிராமணன், நீண்ட நாட்கள் தவம் செய்து வந்தான். தவத்தின் முடிவில் இலட்சுமி தோன்றினார். இந்திரத்துய்மன் லட்சுமியைப் பார்த்து, “அன்னையே! தங்களைப் பற்றி தயவு செய்து சொல்லுங்கள். உண்மையான ஞானம் எப்படிப் பெறுவது என்பதைக் கூற வேண்டும்” என்று மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். லட்சுமியும், இந்திரத்துய்மனிடம், தேவர்கள், முனிவர்கள் யாராலும் அறியப்படாதவள் நான். நானே விஷ்ணுவின் மாயை ஆவேன். விஷ்ணுவுக்கும், எனக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஞானம் என்பதைப் பற்றிச் சொல்வதற்கு, நீ விஷ்ணுவைத் தியானம் செய். அவர் ஒருவராலேயே அதனைக் கூறமுடியும் என்று கூறி மறைந்தார். இந்திரத்துய்மனும் விஷ்ணுவை தியானித்து வந்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர், விஷ்ணு தோன்றினார். இந்திரத் துய்மனுக்கு உண்மையான ஞானம் பெறும் வழியினைச் шлц.-40