பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 633 ஈசான (ஆள்பவன்) பரமேஸ்வரன் (தலைமை ஆட்சியாளர்) அனைத்திற்கும் உயிராயும், மனிதர்களின் பிரபுவாகவும், பெரிய தியானேஸ்வரராய் ஈடு இணையற்ற ஈசனாகவும் இருப்பவர் சிவனேயாவார். அவரே அனைத்தையும் ஆக்குபவர், உயிர்க்கு வினைகளை அனுபவிக்குமாறு செய்பவரும் இவரே. இந்தச் சிவனே, கால தேவனாக மாறி அனைத்தையும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கின்றார். ஈறும் முதலும் இல்லாத இந்தச் சங்கரனே உன்னைப் படைத்தவர் ஆவார் என்று விஷ்ணு பிரம்மனிடம் பேசிய பிறகு, உண்மை சொரூபத்தைக் கண்ட பிரம்மன் சிவனைப் பிரார்த்தித்தான். பிரார்த்தனையில் மகிழ்ந்த சிவன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பிரம்மன் தாங்கள் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று கூற சிவனும் அதற்குச் சம்மதித்தார். சிவன் விஷ்ணுவிடம் பேசத் துவங்கினார். உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் விஷ்ணுவே! உன்னுடைய பக்தியைக் கண்டு மெச்சினேன். என்ன வரம் வேண்டுமோ பெற்றுக் கொள் என்றார் சங்கரன். சிவன் கூறியதைக் கேட்ட விஷ்ணு, எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தவராய் சிவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பின்வருமாறு பேசலானார். "யாவருக்கும் தலைவனாய், பரப்பிரம்மத்தின் சொரூபமாய் இருக்கின்ற தங்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இதைவிடச் சிறந்த வரம் வேறு என்ன இருக்கிறது? * - இதேபோல தங்களிடம் இடைவிடாத பக்தி பூண்டு நான் வாழுமாறு அனுக்கிரகம் செய்யுங்கள்.' - அது அங்ங்னமே ஆகட்டும் என்று கூறிய சிவன் மறுபடியும் விஷ்ணுவைப் பார்த்துப் பேசலானார்.