பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/665

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 637 சண்டையிட்டதால், அவன் பிரசேதர்களின் மகனாகப் பிறப்பான் என்று சிவன் சாபமிட்டார். இதனைக் கேட்ட முனிவர்கள், “தட்சனுடைய கதையினை எங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று லோமஹர்ஷனரைக் கேட்க, அவரும் கூற ஆரம்பித்தார். தட்சன் கதை தட்சன், சிவன் தனக்கு மருமகனாக இருந்தும் தனக்குரிய மரியாதையைக் காட்டவில்லை என்று கோபித்து, தான் செய்யும் யாகத்திற்கு அழையா விருந்தாக வந்த சதியைப் பலவாறு ஏசியும், சிவனைத் தரக்குறைவாகப் பழித்தும் இகழ்ந்தார். நொடிந்து போன சதி அங்கேயே தன் உயிரை நீத்தார். சதி இறந்ததை அறிந்த சிவன், தட்சனிடம் வந்து பூமியில் ஒரு சத்திரியன் மகனாகப் பிறப்பான் என்று சாபமிட்டார். இந்தச் சாபத்தின் பயனாகவே, பிரசேதனை மகனாகத் தட்சன் பிறந்தான். கூர்ம புராணத்தில் உள்ள தட்சயக்ளுக் கதை, வேறு புராணங்களில் உள்ள தட்சயக்ளுக் கதையினின்று ஒரு சிறிது மாறுபடுகிறது. பிற கதைகளில் தட்ச யக்ஞத்திற்கு வந்து உயிரை நீத்தவர் சதி என்றும், அவரே மறுபடியும் பார்வதியாகப் பிறந்தார் என்றும் கூறுகின்றன. கூர்ம புராணக் கதைப்படி, தட்ச யக்ஞம் பார்வதியின் காலத்தில்தான் நடந்தது. யக்ஞத்தை அழிக்குமாறு பரிந்துரை செய்தவர் பார்வதியே ஆவார். இந்த வேறுபாடு நீங்கலாக மற்ற அனைத்தும் எல்லாப் புராணங் களிலும் ஒன்றாகவே உள்ளன. பிரகலாதன் கதை பிரகலாதன் தந்தையாகிய ஹிரண்யகசிபுவை, விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொன்ற கதை முன்னரே