பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 639 வேண்டுமான உணவளித்துத் தம்மிடமே தங்கச் செய்தார். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து எங்கும் மழை பெய்து பஞ்சம் நீங்கியது. முனிவர்கள் தங்கள் சொந்த இடத்திற்குப் போக விரும்பினர். ஆனால் கெளதமர் அவர்களை விடவில்லை. அதனால் கோபம் அடைந்த முனிவர்கள் கெளதமரின் பேரில் பழிபோட நினைத்தனர். மாயை ஆன கறுப்புப் பசுவை கன்றுக்குட்டி ஒன்றை அவர்கள் உண்டாக்கி கெளதமரின் தோட்டத்தில் மேயவிட்டனர். முனிவர்களின் வஞ்சகத்தை அறியாத கெளதமர் அந்தப் பசுவின் கன்றை மாட்டுக் கொட்டிலில் விடுவதற்காக அதைத் தூக்குவதற்குத் தொட்ட வுடன் அந்தக் கன்றுகுட்டி இறந்து விட்டது. அதைப் பார்த்த முனிவர்கள் “ஒ, கெளதமரே நீர் பசுக்கொலை செய்துவிட்டீர். உம்மிடம் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று சொல்லிப் புறப்பட முயன்றனர். இதற்குள் நன்றி கெட்ட முனிவர்கள் செய்த செயலை அறிந்து கொண்ட கெளதமர் “நீங்கள் செய்த தீய செயலுக்காக உங்களைச் சபிக்கிறேன். பலமுறை நீங்கள் ஒவ்வொருவரும் மனிதராகப் பிறந்து, நரகத்தில் கிடந்து உழல்வீர்களாக” என்று சபித்தார். மனிதர்களெல்லாம் விஷ்ணுவினிடமும் சிவனிடமும் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். விஷ்ணு அவர்களை மன்னிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதுவரை நேர்மையான பாதையில் சென்ற அவர்களை நரகத்திற்கு அனுப்பவும் முடியாது. ஆகவே சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். முதலாவது இவர்களை நேர்மையான வழியினின்று மாற்ற வேண்டும். பிறகு கெளதமனின் சாபப்படி இவர்கள் நரகம் போகச் சரியாக இருக்கும் என்று கருதினர். இந்த யோசனையின் படியே சிவன் ஒரு போலி குருவாக வந்து இந்த முனிவர்களின் மனத்தை மாற்றினார். முனிவர்கள்