பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பதினெண் புராணங்கள் சேர்ந்த மணிகுண்டலன் என்பவன் இவனுக்கு நண்பனாக இருந்தான். மணிகுண்டலன் பெருஞ் செல்வந்தருடைய மகன். சூழ்ச்சிக்காரனாகிய கெளதமன் தோழனிடமிருந்து பொருளைக் கொள்ளை அடிக்க நினைத்தான். அது உள்ளுரில் முடியாத காரியம் ஆயிற்று. எனவே நல்லவன் போல் நண்பனைப் பார்த்து, “மணிகுண்டலா! நாம் இருவரும் வெளியூர் சென்று வாணிபம் செய்து பொருள் ஈட்டி வரலாம்” என்றான். இத்திட்டத்திற்கு மணிகுண்டலன் உடன்படவில்லை. “நண்பனே! என் தந்தையிடம் பெருஞ்செல்வம் குவிந்து கிடக்கிறது. நான் ஏன் வெளியூர் சென்று பொருள் தேட வேண்டும்?” என்றான். சூழ்ச்சிக்காரனாகிய கெளதமன், “நண்பனே! மலைபோன்ற செல்வம் தந்தையிடம் இருந்தாலும் மகன் அதை அனுபவிப்பதில் பெருமை இல்லை. தானாகச் சம்பாதிப்பதுதான் சிறப்பாகும்” என்றான். இந்த வாதத்தை மணிகுண்டலன் ஏற்றுக் கொண்டதால் பெரும் பொருளுடன் இருவரும் வெளியூர்களுக்குச் சென்று வாணிபம் செய்தனர். கெளதமன் மிக ஏழை ஆதலால், முதலாகப் போட்ட பொருள் முழுவதும் மணிகுண்டலனுடையதே ஆகும். வியாபாரம் நன்கு நடக்கவே தோழர்கள் வருமானத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். எந்த நிலையிலும் தர்மம்தான் சிறந்தது. தர்ம வழி செல்வதே சிறப்புடையது என்று மணிகுண்டலன் கூறிக் கொண்டிருப்பான். பிராமணனாகப் பிறந்த கெளதமன், ‘பைத்தியக்காரத்தனம். தர்மமாவது, ஒன்றாவது! எப்படியாவது பொருளைச் சேகரித்து வாழ்வதே புத்திசாலித்தனம்’ என்றான். கருத்து வேறுபாடு முற்றவே கெளதமன் ஒரு வழி சொன்னான். “மணிகுண்டலா! நாம் வெளியில் பார்க்கும் பலரையும் இதுபற்றிக் கேட்கலாம். அவர்கள் தர்மம்தான் சிறந்தது என்று சொன்னால், என் பங்குக்குரிய செல்வம் முழுவதையும்