பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/674

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 பதினெண் புராணங்கள் லிங்கங்கள் சிவபெருமானின் ரூப, அரூப வடிவமாக இருப்பது லிங்கமே ஆகும். வாரணாசியில் மிகச் சிறந்த லிங்கங்கள் உள்ளன. இவற்றுள் மிகப் பெரிய வடிவைக் கொண்டது ஓம்காரலிங்கம். மற்ற லிங்கங்களுள் முக்கியமானவையாகக் கருதப்படுபவை கிருத்திவாலேஸ்வரா, மத்ய தேஷ்வரா, விஷ்வேஸ்வரா, கபர்டிஷ்வரா. கூர்ம புராணம் இந்த லிங்கங்களின் மகிமை பற்றிக் கூறுகிறது. லோமஹர்ஷனர் கூடி இருந்த முனிவர்களுக்குக் கூர்ம புராணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ண துவைபாயனரான வேதவியாசர் அங்கே வந்து சேர்ந்தார். லோமஹர்ஷனர் உள்ளிட்ட அனைவரும் அவரை வணங்கி, உண்மையான ஞானத்தைப் பெறுவதற்கு வழியைக் கூறுமாறு அவரை வேண்டிக் கொண்டனர். வேதவியாசர் சொல்ல ஆரம்பித்தார். "பரமாத்மன் தான் முற்றிலும் தூய்மையானதும், என்றும் உள்ளதும் ஆகும். அந்தப் பரமாத்மாவிலிருந்துதான் இப் பிரபஞ்சம் உற்பத்தி ஆகிறது. மகாபிரளய காலத்தில் இப் பிரபஞ்சம் முற்றிலுமாக ஒடுங்கி, அப்பரமாத்மாவினிடமே சென்று சேர்ந்து விடுகிறது. பரமாத்மா ஐம்பூதங்களும் அல்ல. அதனைத் தொடவோ, முகரவோ, வேறு பொறிபுலன்களால் அறியவோ முடியாது. ஜீவாத்மாவில் பரமாத்மா என்றும் இருந்து வருகிறது. ஜீவாத்மாவில் கலந்திருக்கின்ற அகங்காரமே, ஜீவாத்மாவோடு ஒன்றியிருக்கின்ற பரமாத்மாவை அறிய விடாமல் செய்கின்றது. அகங்காரத்தின் காரணமாக ஏற்படும் இந்த மாயையிலிருந்து உண்மையான அறிவாளிகள் விடுபடு கின்றனர். ஞானி என்பவன் தன் ஆத்மாவிற்கும், காணப்