பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 பதினெண் புராணங்கள் - to குருவை எப்பொழுதும் மதித்து நடப்பதுடன், வணங்க வேண்டும். எந்த ஒருவரிடமிருந்தாவது ஞானத்தைப் பெறக் கூடிய இயல்பு இருந்தால் அந்த ஒருவரை குரு என்றே சொல்ல வேண்டும். பொதுவாகப் பேசுமிடத்து, அறிவு புகட்டுகின்ற ஆசிரியர்கள் அல்லாமல் தந்தை, மூத்த சகோதரன், அரசன், மாமன், மாமனார், தாத்தா ஆகியோரையும் குருவாகக் கொள்ளலாம். குருவோடு சமமான ஆசனத்தில் உட்காரக் கூடாது. குருவிடம் விவகாரம் செய்தலோ, மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதோ கூடாது. குருவை அவமதிப்பவன் பாவத்திற்குள்ளாகிறான். குருக்களுக்குள் சிறந்தவர்கள் தாய், தந்தை, ஆசிரியர், மூத்த சகோதரன் என்பவர்களாவர். மந்திரங்களுள் சிறந்தது காயத்ரி மந்திரம். இறந்த வீட்டிலும், இரகண காலத்திலும் வேதங்களைப் படிக்கக் கூடாது. படுக்கையில் படுத்துக் கொண்டோ, புலால் உணவை உண்ட பிறகோ வேதங்களைப் படிக்கலாகாது. புயலடிக்கும் நேரம், அமாவாசை ஆகிய நேரங்களில் படித்தல் கூடாது. கபால மோட்சன தீர்த்தம் 'சிவன் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலம் எவ்வாறு எங்கே சிவனுடைய கையை விட்டு நீங்கிற்று' என்று முனிவர்கள் கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார். முன்னொரு காலத்தில் தன் எதிரில் குடியிருந்த முனிவர்களை எல்லாம் பார்த்து பிரம்மன் தன்னை மறந்தான். பின்வருமாறு பேசத் தொடங்கினான்: "ஒ முனிவர்களே! என்னை யாரென்று நினைத்தீர்கள். சுவயம்புவாகத் தோன்றியவனும், முடிவில்லாதவனுமாகிய நானே பரப்