பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 555 ஆக்கிவிட்டேன். என் மகனைப் போல நீ இருக்கலாம் என்று வரமளித்தார். சிவனே மருத்தின் மகள் ஒருத்தியை நந்திக்குத் திருமணம் செய்து வைத்தார். நால்வகைப் பிரளயங்கள் கூர்மத்தின் வாயாலேயே கூர்ம புராணத்தைக் கேட்ட முனிவர்கள் "கூர்ம அவதாரம் கொண்ட நாராயணனே, தங்கள் மூலம் பல்வேறு வகையான விஷயங்களை அறிந்து கொண்டோம். பிரளயம் என்பது என்ன? அதைப் பற்றி விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று கேட்க கூர்மம் சொல்வத் தொடங்கியது. உயிருடன் வாழும் ஜீவராசிகள் அன்றாடம் இறந்து கொண்டே இருக்கின்றன. இது நித்தியப் பிரளயம் எனப்படும். கல்பமுடிவில் மூன்று உலகங்களும் அழிவது நைமித்திகப் பிரளயம் எனப்படும். பிரபஞ்ச நிலைப்பேற்றுக்கு மூலமாக உள்ள காரணங்கள் அனைத்தும் ஒருசேர அழிவதைப் பிராகிருத பிரதிசர்கா (பெரும்பிரளயம்) என்று கூறுவர். எல்லாம் அழிந்த நிலையிலும் எஞ்சி இருக்கின்ற யோகிகள் மூலப்பொருளுடன் ஐக்கியமாவதை ஆத்யந்திகப் பிரதிசர்கா (மகாப்பிரளயம்) என்று கூறுவர். . நான்கு யுகங்கள் கூடிய ஒர் எண்ணிக்கை போல, ஆயிரம் எண்ணிக்கைகள் முடிந்த பிறகு பிரஜாபதி அனைத்தையும் தம் ஆன்மாவுக்குள் அடக்கிக் கொள்கிறார். அதன் பிறகு நூறு ஆண்டுகளுக்கு மழை என்பதே இல்லாமல் பெரு வறட்சி தோன்றுகிறது. இதனால் எந்த ஒரு உயிரும் நிலை கொள்ள முடியாமல் அழிகின்றன. இந்நிலையில் அனைத்தும் கருகி பூமியுடன் ஐக்கியமாகிவிடுகின்றன. உலகம் முழுவதும் பாலை வனமாகக் காட்சி அளிக்கும் அந்நிலையில் சூரியன் தோன்றி