பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/685

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(16. மச்ச புராணம்) இப்புராணம் பற்றி. வடமொழியில் இப்புராணத்தின் பெயர் மத்ஸ்ய புராணம் என்று வழங்கப்படும். விஷ்ணு, மீன் அவதாரம் எடுத்து பெருவெள்ளத்தில் இருந்து மண்ணையும், குடிகளையும் காப்பாற்றுவது பற்றிப் புராணம் பேசுகிறது. தொன்மையான இக்கதை பார்சிகளின் வேதமாகிய அவஸ்தாவிலும், கிரேக்கப் பழங்கதைகளிலும் இடம் பெற்றுள்ளதாகும். மச்ச அவதாரத்தில், வேதத்தை எடுத்துச் சென்று நீருக்கடியில் வைத்திருந்த ஹயக்கிரீவன் என்ற அசுரனைக் கொன்று வேதத்தை மீட்டுக் கொடுத்த கதை இதிலடங்கும். இந்தியாவில் உள்ள சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்தியம், கெளமாரம் ஆகிய ஆறு சமயங்களும் வேதங்களை ஒப்புக் கொள்வதால், இந்தப் புராணத்தையும் ஏற்றுக் 14000 பாடல்களைக் கொண்ட இப்புராணம், மேலே கூறிய ஆறுவகைச் சமயங்களில் குறிப்பிட்ட ஒரு சமயத்துக்கு உரியது என்று கூறமுடியாது. աւ,-42