பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 669 இவ்வாறு செய்வதால் தாங்கள் செய்யும் பாவத்தின் கொடுமை கொஞ்சம் குறையும் என்று நம்பினான். அவ்வாறே செய்து முடித்தனர். பஞ்சம் தீர்ந்தவுடன் எஞ்சிய மாடுகளை குருவிடம் கொண்டுவந்து சேர்ப்பித்து விட்டு, ஒரு மாட்டைப் புலி அடித்துக் கொன்றுவிட்டது என்று பொய் கூறினார்கள். கார்க முனிவரைப் பொறுத்த மட்டில் இவர்கள் கூற்றில் நம்பிக்கை வைத்திருந்தார். இந்தப் பசுவதை செய்த பாவத்தால் ரிஷிகுமாரர்கள் எழுவரும் வேட்டைக்காரர்களாகப் பிறந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஜதீஸ்மரா இருந்ததால், முற் பிறவியை நினைவில் கொண்டுவர முடிந்தது. அந்த வேட்டைக் காரப் பிறவியைப் போக்கிக்கொள்ள முடிவு செய்து, உண்ணா நோன்பிருந்து எழுவரும் உயிரை விட்டனர். அடுத்த பிறப்பில் எழுவரும் பறவைகளாகப் பிறந்தனர். கடைசி மூவர் தவிர மூத்த நால்வரும் இந்த உலக வாழ்க்கை பிடிக்காமல் நாட்டத்தை வேறு பக்கம் செலுத்தினர். மூன்று பறவைகளும் மரத்தின் மேல் தங்கி இருக்கும் பொழுது பாஞ்சால மன்னன் விப்ரஜா அங்கு வநதான். அவன் தோற்றப்பொலிவைக் கண்ட ஒரு பறவை, இவனைப்போல் அழகான மன்னனாகப் பிறக்க வேண்டும் என்று நினைத்தது. அரசனின் மந்திரிகள் எல்லோரையும் அதிகாரம் செய்வதைப் பார்த்து மற்ற இரு பறவைகளும் மந்திரிகளாகப் பிறக்க விரும்பின. இப்பறவைகள் இறந்த பிறகு முதல் பறவை விப்ரஜ மன்னன் மகனான பிரம்மதத்தனாகப் பிறந்தது. மற்ற இரு பறவைகள் மந்திரி மகன்களாகப் பிறந்தன. அரசன் மகனாகிய பிரம்மதத்தன் கல்யாணி என்ற பெண்ணை மணந்து கொண்டான். அந்தக் கல்யாணி முற்பிறப்பில் அவனால் கொல்லப்பட்ட பசுவே ஆகும். ஒருநாள் மாலைப் பொழுதில் அரச குமாரனும், கல்யாணியும் தோட்டத்தில் உலாவிக் கொண் டிருந்தனர். அரசகுமாரனைப் பொறுத்த மட்டில் அவனுக்கு