பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/701

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 673 புரூரா - ஊர்வசி முன்னொரு காலத்தில் புரூரவன் என்ற மன்னன் உலகை ஆண்டு வந்தான். மாபெரும் சக்தி உடையவனாகிய அவன் நேர்மையிலிருந்து சிறிதும் பிசகாதவனாய் உலகை ஆட்சி செய்து வந்தான். மனிதர்கள் வாழ்க்கையின் குறிக்கோள்களாக உள்ள தர்ம, அர்த்த, காமம் என்ற மூன்றின் அளவறிந்து வாழ்ந்து வந்தான். அவன் நேர்மையை, குறிக்கோள் வாழ்வைக் கண்ட தர்ம, அர்த்த, காம தேவதைகள் இந்த மூன்றில் எதனிடம் அதிக பக்தி கொண்டிருக்கிறான் என்பதை அறிய மானிட வடிவம் கொண்டு வந்தன. இவர்கள் யாரென்று அறியாத அரசன் அவர்களைப் பொன் ஆசனத்தில் இருத்தி முறைப்படி உபசாரம் செய்தான். அப்படிச் செய்யும் பொழுது கூட அவனையும் அறியாமல் தருமத்திற்குக் கொஞ்சம் அதிகமான உபசாரம் செய்து விட்டான். இதைக் கண்டு பொறாத அர்த்த, காம தேவதைகள் அவனைச் சபித்தன. அர்த்த தேவதை 'உன் செல்வத்தையெல்லாம் இழந்து நீ தவிப்பாய்’ என்று சாபமிட்டது. காமதேவதை ஊர்வசியிடம் மயங்கி பைத்தியம் பிடித்து அலைவாய் என்று சாபமிட்டது. ஆனால் தர்மதேவதை நீ அறவழியில் இருந்து நீங்காமையால் இந்தச் சாபங்களில் இருந்து விடுதலை அடையலாம் என்று கூறிப் போய்விட்டது. சில நாட்கள் கழித்து, மன்னன் ஒரு தேரில் ஏறி காட்டுவழி சென்றான். அவன் எதிரே கேசி என்ற அசுரன், ஊர்வசியை பலவந்தமாக இழுத்துச் செல்வதைக் கண்டான். கேசியிடம் போரிட்டு அவனைத் தோல்வியுறச் செய்து, ஊர்வசியை இந்திரனிடம் சேர்ப்பித்தான். இந்த அரிய காரியத்தைச் செய்த புரூரவனிடம் இந்திரன் மிகுந்த நட்புப் பாராட்டி வாழநதான. Ljilj.-43