பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 பதினெண் புராணங்கள் கணவன் வரும்வரை காத்திருக்க வேண்டிய வாரங்கி தன் ஆசிரமம் சென்று தன் தவத்தை மேற்கொண்டாள். இந்திரன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறக்கவில்லை. ஆனால் வஜ்ராங்கனை நேரடியாக எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்த இந்திரன், வாரங்கி தங்கி இருந்த ஆசிரமத்தைச் சுற்றி உள்ள மரங்களை எல்லாம் கீழே விழுமாறு செய்து அதிலுள்ள இலைகளை எல்லாம் தானே ஆடாக மாறித் தின்றுவிட்டான். பிறகு அந்த ஆசிரமத்தைச் சுற்றியுள்ள இடங்களை எல்லாம் பாலைவனமாக்கி வாழ முடியாத இடமாகச் செய்தான். இதன் பிறகு சப்த மேகங் களையும் வரவழைத்து ஆசிரமச் சுவர்கள் எல்லாம் இடியும் வரை மழை பெய்யச் செய்தான். இத்தனை நடந்தும் வாரங்கி தன் தவத்தில் இருந்து விடுபடவும் இல்லை. கண்ணை விழித்துப் பார்க்கவும் இல்லை. நீருக்குள் ஆயிரம் ஆண்டு தவத்தை முடித்த வஜ்ராங்கன், ஆசிரமத்திற்கு வந்தபொழுது அதன் பரிதாப நிலையையும், மனைவி தவத்தில் இருப்பதையும் கண்டான். அது யாருடைய வேலை என்பதையும் தெரிந்து கொண்டான். இந்திரனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சியை பிரம்மாவும், தந்தையும் தடுத்து விட்டார்கள். எனவே தான் ஒரு மகனைப் பெற்று இந்திரனைப் பழிவாங்க முடிவு செய்தான். மறுபடியும் தவத்தில் ஈடுபட்டு பிரம்மன் எதிர்பட்டவுடன், இந்திரனை அழிக்க ஒரு மகன் வேண்டும் என வேண்டினான். அப்படியே ஆகட்டும் என்று பிரம்மன் கூறி மறைந்தார். இதிலிருந்து தாரகன் என்ற அந்தப் பிள்ளையை ஆயிரம் ஆண்டுகள் தன் கருவிலேயே வைத்திருந்தாள் வாரங்கி இறுதியாக தாரகன் என்ற மைந்தன் பிறந்தான். அவன் பிறந்த பொழுது பூமி நடுங்கிற்று. கடல் அலைகள் மிக உயரத்திற்கு எழும்பின. கொடுமையான புயல் வீசிற்று. கொடிய வன விலங்குகள்