பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 பதினெண் புராணங்கள் குஜம்பா, மகிஷா, குஞ்சரா, மேகா, காலநேமி, மதனா, ஜம்பகா, சும்பா ஆகியோர் படைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். தேவர்களும் பெரும் போர் உள்ளது என்பதை அறிந்து பெரும்படை திரட்டினர். இந்திரன், மாதலி என்பவன் ஒட்டிய ரதத்திலும் எமன், எருமைக்கடா மேலும்; அக்கினி, ஆட்டின் மேலும் வருணன், ஒரு பாம்பின் மேலும் ஏறி வந்தனர். காலாட்படையில் சூரியன், சந்திரன், குபேரன் முதலியோர் வந்தனர். போர் தொடங்கியது. யானைகளோடு யானைகளும் குதிரைகளோடு குதிரைகளும், ரதங்களோடு ரதங்களும் மோதின. இப்போரில் பல அசுரர்கள் கொல்லப்பட்டாலும் தேவர்கள் தோற்று ஒடும் நிலைமை வந்தது. அப்போது இந்திரனுக்கு உதவியாக விஷ்ணு வந்தார். அவருடைய சக்கரம் பலரைக் கொன்றாலும் ஜம்பா என்பவன் கதாயுதத்தால் அடித்து விஷ்ணுவை மயக்கம் அடையச் செய்தான். ஆனால் இந்திரன் ஜம்பாவைக் கொன்றான். இறுதியாகத் தாரகனைச் சந்திப்பது என்பது தேவர்களுக்கு முடியாத காரியம் ஆகி விட்டது. தேவர்கள் தோற்றனர். தாரகன் வெற்றி அடைந்தான். பிரம்மனது அறிவுரை தாரகனிடம் அடிவாங்கிய தேவர்களில் இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் நேரே பிரம்மனிடம் சென்றார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் ஏன் எல்லாம் இழந்தவர்கள் போல முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கிறீர் கள்? என்ன நடந்தது என்று கேட்டார். தேவர்கள் "பிரம்மாவே நீங்கள்தான் எங்கள் கஷ்டங்களுக்குக் காரணம். நீங்கள் தாரகனுக்குக் கொடுத்த வரத்தின் வன்மையால் எங்கள் அனைவரையும் கொடுரமாக அடித்து விட்டான். அவனைக் கொல்ல முடியாது என்று தெரிந்துவிட்டது. இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார்கள். பிரம்மன் கவலைப்பட