பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/716

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 பதினெண் புராணங்கள் ஸ்கந்தன் கூறவே தாரகன் தண்டாயுதத்தை எறிய அவர் அதனைத் தடுத்துவிட்டார். அதன் பிறகு சக்திவாய்ந்த பல ஆயுதங்களையும் தாரகன் வீச அவற்றை எல்லாம் தடுத்து அழித்து விட்டார் ஸ்கந்தன். இறுதியாக ஸ்கந்தன் தன் வேலாயுதத்தைச் செலுத்தித் தாரகன் மார்பைப் பிளந்தான். தாரகன் பிரம்மனிடம் வரம் பெற்றபடியே ஏழு வயது பாலகனால் கொல்லப்பட்டான். தோல்வியே கண்டறியாத தாரகன் இறந்ததைக் கண்டு அசுரர்கள் போர்க்களத்தை விட்டே ஓடினர். கெளரி சிவன் ஒருநாள் பார்வதியைப் பார்த்து விளையாட்டாக காளி என்று அழைத்தார். தன் கறுப்பு நிறத்தைச் சுட்டிக் காட்டிக் கேலி செய்கிறார் என்று நினைத்த பார்வதி பெருங் கோபம் அடைந்து தன் நிறத்தை மாற்றிக் கொள்ளத் தவம் செய்யச் சென்றார். அவர் சென்றிருக்கும் பொழுது, அதி என்ற அசுரன் சிவபெருமானிடம் விளையாட்டுக் காட்ட எண்ணி பாம்பு வடிவுடன் நந்திதேவன் காவலனைத் தாண்டி சிவன் இருக்குமிடம் சென்றான். உள்ளே பார்வதி வடிவெடுத்து சிவன் முன் நிற்க, அவன் யார் என்பதை கவனிக்காமல் பார்வதி என்று நினைத்து வந்து விட்டாயா என்றார் சிவன். சரியான பதில் வராததைக் கண்ட சிவன், அவன் அதி என்ற அசுரன் என்று தெரிந்ததும் அங்கேயே அவனைக் கொன்று விட்டார். தவம் செய்யச் சென்ற பார்வதி பிரம்மன் எதிர்ப் பட்டவுடன் தன்னுடைய நிறத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, பிரம்மன் அவ்வண்ணமே ஆகட்டும் என்றார். பார்வதியின் நிறம் தனியே கழன்று நின்றது. அது பெண் தெய்வ வடிவில் கெளசிகி என்ற பெயருடன் நின்றது. அத்தெய்வத்தை விந்தியாவாசினி என்ற பெயரைத் தாங்கி