பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/721

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 693 வடிவமைத்தால், அச்சிலைக்குப் பத்து கைகள் வடிக்கப்பட வேண்டும். திரிபுரத்தை எரிப்பதுபோல் தோற்றம் தர வேண்டுமானால், பதினாறு கைகள் வழங்கப்பட வேண்டும். சிவனின் வடிவமைத்தலில் ஒரேயொரு வடிவம் தனித்தன்மை பெற்றிருக்க வேண்டும். அவ்வடிவம் அர்த்தநாரீசுவர வடிவம். பாதி ஆண் உருவும், பெண் உருவு பாதியும் பெற்றிருத்தல் வேண்டும். இதில் சிவன் உருவம் வலப்பக்கமாகவும், பார்வதி உருவம் இடப்பக்கமாகவும் அமைக்கப்பட வேண்டும். வலக் கையில் கபாலம் அல்லது திரிதுலம் ஏந்தியிருக்க வேண்டும். இடக்கையில் தாமரை மலர் அல்லது கண்ணாடி இருக்க வேண்டும். மற்றொரு வகையான விக்கிரகம் உமா மகேஸ்வரன் எனப்படும். இரண்டு விக்கிரகங்கள் சிவனுடையதும், பார்வதியுடையதும் தனித்தனியே செய்யப்பட வேண்டும். மண்டபங்கள் மண்டபங்கள் பலவகைப்படும். அவற்றைக் கட்டும் பொழுது, எத்தனைத் துரண்கள் வைக்கப்பட்டுக் கட்டப் படுகிறதோ அதற்கு ஏற்றவாறு வேறு வேறான பெயர்களில் குறிப்பிடப்படும். இருபத்தேழு விதமான மண்டபங்கள் மிக முக்கியமானவை எனக் கருதப்படுகிறது. அவையாவன: 1. புஷ்பக மண்டபம் அறுபத்தி நான்கு தூண்களையும், 2. புஷ்பபாத்ரா மண்டபம் அறுபத்தி இரண்டு தூண் களையும், . 3. சுவ்ரதா மண்டபம் அறுபது தூண்களையும், 4. அம்ரித்த நந்தனா ஐம்பத்தெட்டு தூண்களையும், 5. தெளவுல்யா ஐம்பத்தாறு தூண்களையும், 6. புத்தி சம்கீர்னா ஐம்பத்து நான்கு தூண்களையும்,