பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(17. கருட புராணம்) இப்புராணம் பற்றி. கருடன் விஷ்ணுவிற்கு வாகனமாகவும், சிறந்த பக்தனாகவும் இருந்ததால் அவனது பக்தியை ஏற்றுக் கொண்ட விஷ்ணு, அவனையே ஒரு புராணம் பாடுமாறு பணித்தார். அதன்படி காசியப முனிவருக்கு கருடன் இதை உரைத்ததால் கருடபுராணம் எனப் பெயர் பெற்றது. காசியப முனிவருக்குச் சொன்னதை விஷ்ணுவும் பங்கிட்டுக் கொண்டார். அவர் அதனை ருத்ரன், பிரம்மன் மற்ற தேவர்களுக்கும் சொல்ல, பிரம்மன் அதனை வியாச முனிவருக்குச் சொல்ல, அவர் லோமஹர்ஷனருக்குச் சொன்னார். நைமிசாரண்ய வனத்தில் செளனக முனிவருக்கும், மற்ற முனிவர்களுக்கும் லோமஹர்ஷனர் இப்புராணத்தைக் கூறினார். பூர்வ காண்டம், உத்தர காண்டம் என இரண்டு காண்டங்கள் உள்ளன. 18,000 பாடல்கள் உள்ளன. பொதுப்படையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகிய பல விஷயங்கள் பற்றிக் கூறுவதால் இதனை ஒரு களஞ்சியம் என்று கூறலாம். பூர்வ காண்டத்தில் புராணங் களுக்குரிய ஐந்து இலக்கணங்களும் உள்ளன. இவை