பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 699 மேலே சொல்லிய இடங்களைத் தவிர வேறு இடங்களில் இருந்து, மேலே சொல்லிய உறுப்புகளைத் தவிர வேறு உறுப்புகளில் கடித்தால், பிரானேஷ்வர மந்திரத்தைச் சொல்லி பிழைக்கச் செய்யலாம். எட்டு இதழ்களை உடைய ஒரு தாமரையை வரைந்து இந்த மந்திரத்தை அதன் இதழ்களில் எழுதி, பாம்பால் கடிக்கப்பட்டவர் மேல் இந்தப் படத்தை வைத்து, அமர்ந்து இருந்து கொண்டு கீழே மந்திரங்களை திருப்பித் திருப்பிச் சொல்லவேண்டும். உருக்கிய நெய்யைக் கடிபட்டவனுக்குக் கொடுத்து குடிக்கச் சொன்னால் அவன் பிழைக்க உதவியாக இருக்கும். இம்மந்திரங்கள் ஜெபிக்கப் படும்போது, கை நிறைய சர்க்கரையை வீட்டிற்குள் எறிந்தால் பாம்புகள் அந்தப் பக்கமே வராது. சாளக்கிராமம் சாளக்கிராமம் என்பது விஷ்ணுவைக் குறிக்கும் ஒரு வடிவமாகும். இது பலவகைப்படும். சங்கு, சக்கரம், பத்மம் ஆகிய அடையாளங்களை இதே வரிசையில் பெற்றிருப்பது கேசவ சாளக்கிராமம். இம்முறை மாறி சக்கரம், சங்கு பத்மம், கதை என்ற வரிசையில் பெற்றிருப்பது மாதவ சாளக்கிராமம். பத்மம், கதை, சக்கரம், சங்கு வரிசையில் இருப்பது நாராயண சாளக்கிராமம். கதை, பத்மம், சங்கு, சக்கரம் வரிசையில் இருப்பது கோவிந்த சாளக்கிராமம். பத்மம், சங்கு சக்கரம் கதை வரிசையில் இருப்பது விஷ்ணு சாளக்கிராமம். சங்கு, பத்மம், கதை, சக்கரம் இருப்பது மதுசூதனன் சாளக்கிராமம். கதை, சக்கரம், சங்கு பத்மம் வரிசையில் இருப்பது திரிவிக்கிரம சாளக்கிராமம். பத்மம், சக்கரம், கதை, சங்கு வரிசையில் அமைந்திருப்பது பத்மநாப சாளக்கிராமம். சக்கரம், சங்கு, கதை, பத்மம் வரிசையில் அமைந்திருப்பது வாசுதேவ சாளக்கிராமம். கதை, பத்மம், சக்கரம், சங்கு வரிசையில் அமைந்திருப்பது பூரீகிருஷ்ண சாளக்கிராமம்.