பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/737

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 709 இந்த மெய்ஞ்ஞானம் பெறுதல் மிக மிகச் சிறப்புடைய தாகும். இதனை அடுத்து கருட புராணத்தின் உத்திர காண்டம் தொடங்குகிறது. லோமஹர்ஷனரைப் பார்த்து முனிவர்கள் பின்வருமாறு கேட்டனர். 'லோமஹர்ஷனரே! ஒரு உடம்பு நீங்கியவுடன் ஆத்மா மற்றோர் உடம்பினுள் புகுந்து விடுகிறது என்று சொன்னிர்கள். "நீங்களே உடம்பைவிட்டு நீங்கிய உயிர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, நரகத்தில் துன்பம் அனுபவித்து விட்டுப் பிறகு மற்றொரு உடம்பில் புகுவதாகக் கூறுகிறீர்கள். இந்த இரண்டு கூற்றுக்களாலும் நாங்கள் குழப்பம் அடைந் துள்ளோம். தயவு செய்து எங்கள் குழப்பத்தைப் போக்க வேண்டுகிறோம்.” இதைக் கேட்ட லோமஹர்ஷனர், “குழப்பம் வேண்டாம். கருடனுக்கும், விஷ்ணுவுக்கும் நடந்த உரையாடலை இதோ கூறுகிறேன், கேளுங்கள்.” கருடன் விஷ்ணுவிடம் கேட்ட வினாக்கள் ஒருமுறை கருடன் உலகத்தைச் சுற்றிப் பார்த்துவர எண்ணி மூன்று உலகங்களையும் பார்த்துவிட்டு மீண்டான். அவன் மனத்தில் மகிழ்ச்சி இல்லை. மனம் கனமாக இருந்தது. சென்றவிடங்களில் எல்லாம் துக்கமும், துயரமும் தாண்டவ மாடக் கண்ட கருடன் மனஅமைதி இல்லாமல், விஷ்ணு லோகம் போய்ச் சேர்ந்தான். அவன் இதுவரை பார்த்த காட்சி களுக்கு நேர்விரோதமாக விஷ்ணு லோகத்தில் அனைவரும் ஆனந்தத்துடன் இருந்தனர். மிக அழகான உடை உடுத்தி மகிழ்ச்சி தாண்டவமாடும் முகங்களுடன் காணப்பட்டனர். இலட்சுமி எல்லா இடங்களிலும் இருந்ததால் எங்கும்