பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/739

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 711 முன்னொரு காலத்தில் விரவாஹனா என்ற மன்னன் நடுநிலை தவறாமல் நேர்மையுடன் ஆட்சி செய்து வந்தான். ஒருமுறை காட்டிற்குச் சென்ற பொழுது வசிட்டரின் ஆசிரமம் எதிரே தென்பட்டது. உள்ளே சென்று, முனிவரை வணங்கிய மன்னன், முனிவரே! நன்முறையில் ஆட்சி செய்தாலும் யமபயம் என்னை வாட்டுகிறது. யமனுடைய பிடியில் அகப்படாமல் இருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்தருளுங்கள் என்று கேட்டான். “தர்மவழி பலவகைப்படும் என்று தர்ம சாத்திரங்கள் சொல்கின்றன. தர்மம் செய்வதில் ஒரு காளைமாட்டை தானம் செய்வது மிகச் சிறந்த புண்ணியமாகும்” என்று வசிட்டர் கூறிவிட்டு, "தர்மவத்சாவின் கதை தெரியுமா?” என்று கேட்டு, வசிட்டர் கூற ஆரம்பித்தார். முன்னொரு காலத்தில் விதேகா என்ற நகரத்தில் தர்மவத்சா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். நீதி தவறாமல் தர்ம சிந்தையுடன் வாழ்ந்து வந்த பிராமணன், ஒருநாள் ஒரு மலையின் மேல் ஏறி, யாகத்திற்குப் பயன் படுத்தக் கூடிய வேர்களைப் பறிக்கச் சென்றான். அப்பொழுது, முன்பின் தெரியாத நால்வர் அங்கு வந்து இந்த பிராமணனைத் துக்கிக் கொண்டு ஆகாய மார்க்கமாகச் சென்றனர். ஓரிடத்தில் அவனை இறக்கி விட்டனர். செல்வம் கொழிக்கும் பெரு நகரமாக இருந்தது அவ்வூர். திக்கு திசை புரியாமல் விழித்துக் கொண்டிருந்த பிராமணனை அரசன் முன்னே கொண்டு நிறுத்தினர். இந்த பிராமணனைக் கண்டவுடன் அரசன் சிம்மாசனத்தில் இருந்து எழுந்து இறங்கி வந்து பிராமணனை வணங்கி, மிகப் பெரிதாக வரவேற்றான். பிறகு பிராமணன்ைத் தூக்கி வந்த நால்வரையும் பார்த்து, இவரை இருந்த இடத்தில் கொண்டு விடுங்கள் என்று கூறினார். ஆச்சரியம் அடைந்த பிராமணன், சற்றுப்