பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 45 சர்மாவை அழைத்து, “உன் தாய் இறந்துவிட்டாள். அவள் உடம்பு வீட்டை அசுத்தம் செய்கிறது. கத்தி எடுத்து அவள் உடம்பைப் பல துண்டங்களாக வெட்டித் தூரத்தே எறிந்து விடு' என்று ஆணையிட்டார். ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் தந்தையின் கட்டளையை யக்ஞசர்மா செய்து முடித்தான். மகனுடைய பணியைக் கண்டு மகிழ்ந்த சிவசர்மா தன் மாயா சக்தியால் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணை உற்பத்தி செய்து, தன் இரண்டாவது மகனாகிய வேதசர்மாவிடம் அனுப்பினார். மகனை அழைத்து, "இந்த அழகான பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்; அவளைச் சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று கூறினார். அந்தப் பெண் வேதசர்மாவிடம் வந்து 'உன் தந்தை மிகவும் வயதானவர், நோயுற்றுள்ளார். அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்' என்றாள். வேதசர்மா தான் மணம் செய்து கொள்ளமுடியாது என்று கூறி, எப்படியாவது தன் தந்தையை அவள் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். உடனே அந்தப் பெண் நான் சொல்வதற்கு நீ கட்டுப்படுவதானால் உன் தந்தையைத் திருமணம் செய்து கொள்கிறேன்' என்றாள். அவள் என்ன விதித்தாலும் அதைச் செய்வதாக வேதசர்மா ஒப்புக்கொண்டான். அப்பெண் "உன் தலையை வெட்டி என் கையில் கொடுக்க வேண்டும். உன் தலை என் கைக்கு வந்தவுடன் உன் தந்தையை மணந்து கொள்கிறேன்' என்றாள். மறுவார்த்தை பேசாமல் வேதசர்மா . தன் தலையை வெட்டி அவள் கையில் கொடுத்தான். வேதசர்மாவின் வெட்டுண்ட தலையை மூன்றாவது மகனாகிய தர்மசர்மாவிடம் சிவசர்மா கொடுத்தார். அந்தத் தலையை வைத்துக் கொண்டு மிகத் தீவிரமாக தர்ம தேவதையை தியானம் செய்தான், தர்மசர்மா. தர்ம தேவதை