பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/740

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 பதினெண் புராணங்கள் பொறுங்கள். நீங்கள் யார்? நான் ஏன் இங்கு கொண்டு வரப்பட்டேன்? என்னை எதற்காக வணங்கினர்கள்? இதற்கு விளக்கம் பெற விரும்புகிறேன் என்று கூறினான். உடனே அரசன், தர்ம வழியில் நடந்து விஷ்ணுவை வழிபடுகின்ற தூய்மையானவர்களைக் காணவேண்டுமென்பது என் விருப்பமாகும். அந்த வழியில் செல்லும் தூய்மையான உங்களைத் தரிசிக்க விரும்பினேன். அதனால்தான் உங்களை இங்கே கொண்டு வருமாறு கூறினேன். நான் வந்து உங்களை வணங்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் உங்களை இங்கே கொண்டுவரச் சொன்னது அதீதமானதுதான். அதற்கும் ஒரு காரணமுண்டு. அதை என் மந்திரிகள் இப்பொழுது உங்களுக்கு விளக்கிச் சொல்வார்கள் என்று கூறி முடித்தார். மந்திரிகளுள் ஒருவனாகிய விபஸ்வித் என்பவன் இப்பொழுது சொல்ல ஆரம்பித்தான்."எங்கள் மன்னர் போன ஜென்மத்தில் விரதா நகரில், விஷ்வம்பரா என்ற பெயருடைய வைசியனாக வாழ்ந்து வந்தார். வயது முதிர்ந்த காலத்தில் அவரும் அவர் மனைவியும் தீர்த்த யாத்திரை சென்று பல தீர்த்தங்களில் நீராடிவிட்டு ஊர் திரும்புகின்ற வழியில் லோமஷா என்ற முனிவரைப் பார்த்தனர். அந்த வைசியர் தன் வரலாற்றை முனிவரிடம் கூறி, இறுதியாக, இவ்வளவு வயதாகியும் இன்னும் பொருட்செல்வத்தின் மீது இருந்த பற்று நீங்கவில்லை. அதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டார். அதற்கு விளக்கம் தரும் முறையில் லோமஷா முனிவர், நாரதர் கதையைக் கூறத் துவங்கினார். முன்னொரு பிறப்பில், ஒரு பிராமணன் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்தவரின் மகனாகப் பிறந்தார். அந்த பிராமணனைச் சந்திக்கப் பல அறிஞர்களும், முனிவர்களும் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை எல்லாம்