பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/741

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 713 விடாமல் கேட்டுக் கொண்டிருந்த பணிப்பெண்ணின் மகன் கேள்வி ஞானத்தாலேயே சிறந்த அறிஞனாக மாறிவிட்டான் என்று சொல்லி வரும் பொழுதே பிரம்ம சொரூபம், ஆத்ம சொரூபம் என்பவற்றை எல்லாம் லோமஷா கூறினவுடன், வைசியனின் மனம் அமைதி அடைந்தது. அப்பொழுது அவனைப் பார்த்து லோமஷா, பின்வருமாறு கூறினார். "ஓ! வைசியனே, நீ நிரம்பப் புண்ணியம் செய்திருக்கின்றாய். ஒரே ஒரு குறைதான் உண்டு. ஒரு காளைமாட்டை தானமாகக் கொடுத்தால், பல அசுவமேத யாகங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும்” என்று கூறினார். உடனே அந்த வைசியன், புஷ்கராவிற்குச் சென்று காளைமாட்டை தானம் செய்து பெரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டதால் இப்பொழுது இங்கு அரசராக உள்ளார். பிராமணரே! எங்கள் அரசர் தர்ம சிந்தை உள்ள தூயவர்களைத் தரிசிக்க வேண்டுமென்று விரும்புவதால் அடிக்கடி உங்களைப் போன்ற பெரியவர்களை இங்கே வரவழைத்து தரிசனம் செய்கிறார். இந்தக் கதை யைக் கூறி முடித்த வசிட்டர், விரவஹனாவைப் பார்த்து, 'அரசனே! நீ நிரம்பப் புண்ணியம் செய்திருக்கிறாய் என்றா லும், இந்தக் காளை மாட்டு தானத்தை (விருஷோத்சர்கா) செய்துவிட்டால் பெரும் புண்ணியத்தை அடைவாய்' என்று கூறினார். வசிட்டர் வார்த்தையைக் கேட்ட மன்னன், உடனே சென்று காளைமாட்டை தானம் செய்தான். அவன் இறந்த பொழுது, யமன் அவனை நேரே சொர்க்கத்திற்கு அனுப்பி சந்தப்தகாவும், பேய்களும் முன்னொரு காலத்தில் சந்தப்தகா என்ற பிராமணன் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்து வந்தான். ஸ்தல யாத்திரை சென்று பல தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு வேறொரு தீர்த்தத்திற்குச் செல்லும் வழியில் ஒரு அடர்ந்த காட்டிடை