பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/742

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714 பதினெண் புராணங்கள் அகப்பட்டுக் கொண்டான். பறவைகள் கூட மரங்களுக்குக் கீழே பறக்க முடியாதபடி அவ்வளவு அடர்த்தியாக இருந்தது காடு. அக்காட்டினுள் நுழைந்து வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட இந்த பிராமணன் ஓரிடத்தில் நின்று பக்கத்தில் உள்ள பெரிய மரத்தை அண்ணாந்து பார்த்தான். அங்கே ஒரு பிணம் தொங்கிக் கொண்டிருப்பதையும், ஐந்து பேய்கள் அதைத் தின்று கொண்டிருப்பதையும் பார்த்தான். பயந்து போன பிராமணன் அதைப் பார்த்துவிட்டுச் செய்வதறியாது நிற்கையில் நான்கு பேய்களும் அவனைச் சுற்றிக் கொண்டன. நான்தான் முதலில் இவனைப் பார்த்தேன். எனக்குத்தான் இவன் ஆகாரமாக வேண்டும் என்று ஒவ்வொரு பேயும் சொல்லிக் கொண்டு தம்முள் சண்டையிட்டன. திகைத்து நின்ற பிராமணனைத் தூக்கிக் கொண்டு நான்கு பேய்களும் ஆகாயத்தில் கிளம்பின. பிராமணன் விஷ்ணு பக்தன் ஆகையால், விஷ்ணுவை தியானித்தான். யட்சர்களின் தலைவனான மணிபத்ராவை அழைத்து, நீ ஒரு பிரேதமாகச் சென்று அப்பேய்களின் கவனத்தைக் கவர்ந்து பிராமணனை விடுவிப்பாயாக என்று உத்தரவு இட்டார். மணிபத்ரா, பிராமணனைப் பிடித்திருந்த நான்கு பேய்களையும் எட்டி உதைத்துத் தள்ள அந்தப் பேய்கள் பிராமணனை விட்டுவிட்டு மரத்தில் தொங்கிய சடலத்திற்குப் பக்கத்தில் போக யத்தனித்தன. அதற்குள் மணிபத்ரா அந்தச் சடலத்தை எடுத்துக் கொண்டு சென்றது. அந்த நான்கு பேய்களும் வேறு வழியில்லாமல் பிராமணன் காலில் விழுந்தன. நாங்கள் நால்வரும் மிகப் பெரிய பாவிகள். எங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சின. பிராமணன் அந்தப் பேய்களைப் பார்த்து நீங்கள் யார், எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள் என்று கேட்க, பார்யுவிதா என்ற முதலாவது பேய் தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கியது.