பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/743

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 715 இந்தப் பேய் முன் பிறப்பில் ஒரு பிராமணன். இல்லறத்தா னாக இருக்கும் பொழுது ஒரு சிரார்த்தத்திற்கு பிராமணனை வரச் சொல்லி இருந்தான். அந்த பிராமணன் வர அதிக நாழியாயிற்று. பசி மிகுதியினால் இவன் உணவை உண்டு விட்டான். காலம் கடந்து வந்த பிராமணனுக்கு இவன் உண்டது போக எஞ்சியதைக் கொடுத்து உண்ணச் செய்தான். பிதுர்க் களை மதியாமல் தான் முதலில் உண்டதால் பேயானான். சுச்சிமுகா என்ற இரண்டாவது பேய் முன் ஜென்மத்தில் நேர்மை, ஒழுக்கம் இல்லாத ஒரு சத்ரியனாக இருந்தது. பத்ரவதா என்ற நதிக்கரையில் ஒரு பிராமணன் தன் ஐந்து வயது மகளைக் கரையில் உட்கார வைத்துவிட்டுக் குளிக்கப் புறப்பட்டான். இந்தச் சத்ரியன் அவளை அழித்து அவள் ஆபரணங்களைப் பிடுங்கிக் கொண்டான். குழந்தை தண்ணீர் குடிப்பதற்காகச் செம்பை வாயில் வைத்த பொழுது அந்தச் சத்ரியன் குழந்தையிடம் இருந்து செம்பைப் பிடுங்கி தண்ணீரையும் குடித்துவிட்டான். குழந்தை பயத்தினால் இறந்து விட்டது. குழந்தையைத் தண்ணிர் குடிக்க முடியாமல் செய்ததால் அந்தப் பேய்க்கு எதையும் உண்ண முடியாமல், வாயில் ஒர் ஊசி அளவு துவாரமே இருந்தது. விக்ரகா என்ற பேய் முன் ஜென்மத்தில் ஒரு வைசியனாக இருந்தது. அந்த வைசியன் தன் நண்பன் ஒருவனைச் சேர்த்துக் கொண்டு, துார தேசம் சென்று வியாபாரம் செய்தனன். அந்த நண்பன் பெரு லாபத்தை அடைந்தான். இவன் எல்லா வற்றையும் இழந்தான். இருவரும் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் ஒர் ஆற்றங்கரையில் இவன் அமர்ந்திருக்க, நிறைந்த லாபம் ஈட்டிய இவன் நண்பன் இவன் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் பொருளைத் திருட எண்ணிய இவன், தூங்குகின்றவனை ஆற்றுக்குள் தள்ளிவிட்டான். பிறகு அவன் பொருளை