பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/744

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716 பதினெண் புராணங்கள் எல்லாம் இவன் எடுத்துக் கொண்டு இவன் ஊருக்குத் திரும்பினான். அவன் மனைவியைப் பார்த்து, 'உன் கணவனைத் திருடர்கள் அடித்துக் கொன்று விட்டார்கள் என்று சொல்லி விட்டான். துயரம் தாங்காத அவள் தற்கொலை செய்து கொண்டாள். இவன் பேயாக மாறி அலைகிறான். நான்காவது பேய் ரோதகா என்பவன் முற்பிறப்பில் சூத்திரனாக இருந்தான். இவன் உழைப்பைக் கண்டு மகிழ்ந்த மன்னன், நூறு கிராமங்களை இவனுக்கு இனாமாகக் கொடுத்தான். இவனுக்குத் தாய், தந்தையர், ஒரு தம்பி ஆக மூவர் உறவினர் இருந்தனர். நிலத்து ஆசை வெறியாக மாறிவிட்ட இவன், தாய் தந்தையருக்கும், தம்பிக்கும், சோறு போடுவதே வீண்செலவு என்று நினைத்து தம்பியை விரட்டி விட்டான். தாய் தந்தையரை சிறைக்குள் அடைத்து விட்டான். சிறையில் அடைபட்ட தாய் தந்தையர் விஷம் குடித்து இறந்தனர். தம்பியும் வறுமையால் உயிரை விட்டான். இவன் இறந்த பிறகு பேயாக மாறி விட்டான். ஐந்தாவது பேய் லேகா, முற்பிறப்பில் ஒரு பிராமணனாக இருந்தான். கோயிலில் பூசை செய்யும் பணியில் ஈடுபட்டிருந் தான். கோயிலில் உள்ள பல விக்கிரங்களுக்கும் ஆபரணங்கள் போடப்பட்டிருந்தன. அந்த ஆபரணங்களை எடுப்பதற்காக ஒரு கடப்பாறையால் நெம்பி எடுத்ததனால், விக்கிரகங்கள் காயப்பட்டன. இவன் நகைகளைத் திருடிய விஷயம் அரசனுக்குத் தெரிந்துவிட அரசன் இவனுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கத் தயாராக இருந்தான். அதை அறிந்து கொண்ட இந்த பிராமணன் அரண்மனைக்குள் புகுந்து அரசனைக் கொன்றுவிட்டான். நகைகளை எடுத்துக் கொண்டு ஊரைவிட்டுச் செல்லும் பொழுது, இந்த பிராமணனைப் புலி கடித்துக் கொன்றதால், இப்பொழுது பேயாக இருக்கிறான்.