பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/745

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 717 பேய்கள் இந்தக் கதைகளைக் கூறி முடித்ததும், அவை தங்கள் பிழையை உணர்ந்து விட்டதால், விஷ்ணுலோகத்தில் இருந்து விமானங்கள் வந்து அந்த ஐந்து பேய்களையும் சாந்தப்பதகா என்ற பிராமணனையும் விஷ்ணுலோகம் அழைத்துச் சென்றது. இராமனும் சீதையும் கருடன் விஷ்ணுவைப் பார்த்து, “பிரபுவே! பிதுர்க்களுக்கு எங்களைப் போன்ற உடம்பு இல்லை. அப்படி இருக்க நாம் சமர்ப்பிக்கும் பிண்டங்களை, உணவை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்” என்று சொல்வது எப்படிப் பொருந்தும் என்று கேட்க, விஷ்ணு விடை கூறினார். "கருடா பிதுர்க்களுக்கு பூமியில் உள்ளவர்களைப் போல உடம்பு இல்லை என்பது உண்மைதான். ஆனால் சிரார்த்தச் சடங்கில் பிராமணர்களை அழைத்து, உணவு பரிமாறு கிறார்கள் அல்லவா? வருகின்ற பிதுர்க்கள் இந்த பிராமணர் களின் உடம்பில் புகுந்து உணவை ஏற்றுக் கொண்டு போய் விடுகிறார்கள். ராமன் சிரார்த்தச் சடங்கு செய்த கதையை உனக்குச் சொல்கிறேன், கேள். ராமன், இலக்குவன், சீதை ஆகிய மூவரும் காட்டில் இருக்கும் பொழுது தசரதன் இறந்து விட்ட செய்தி ராமனுக்குக் கிட்டியது. அப்பொழுது எளிய உணவைச் சமைத்து, முனிவர்களை அழைத்து அவர்களுக்கு உணவு கொடுக்கத் தயாரானான் ராமன். முனிவர்கள் உண்ண அமர்ந்தவுடன், பரிமாற வேண்டிய சீதை எங்கும் காணப்படவில்லை. நேரம் ஆகிக் கொண்டிருந்தபடியால், ராமனே அவர்களுக்குப் பரிமாறி, அவர்கள் உண்டபின் அனுப்பிவிட்டான். வந்தவர்கள் உண்டு போனபின் சீதை இராமனிடம் வந்தாள். பரிமாற வேண்டிய நீ எங்கே போய்விட்டாய் என்று ராமன் கேட்டான்.