பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 பதினெண் புராணங்கள் ஒரு சமயம் கயாசுரன் பூஜைக்குத் தேவையான மலர்களைப் பறிக்கச் சென்றான். களைப்பின் காரணமாக படுத்துறங்கி விட்டான். அச்சமயம் விஷ்ணு அங்கு தோன்றி கயாசுரனைக் கொன்றார். கிகதா என்ற இடத்தில் இவ்வதம் நடைபெற்றதால் அவ்விடம் கயா என்ற பெயர் பெற்றது. சிரார்த்தம் செய்வதற்கு முக்கியமான இடமாகக் கருதப்படுவது ᏜyᎿl J. மக்களுக்கு முக்தி பெறுவதற்கு நான்கு வழிகள் கூறப் பெறுகின்றன. முதலாவது பரப்பிரம்மம் பற்றிய ஞானம் பெறுவது. இரண்டாவது கயையில் சிரார்த்தம் செய்வது. மூன்றாவது மாட்டுக் கொட்டிலில் உயிரை விடுதல். நான்காவது, குருக்ஷேத்திரத்தில் சென்று தங்கி இருத்தல். முடிவுரையாக, கருட புராணம், மற்றப் புராணங்களைப் போல இதனைப் படிப்பதால் எல்லா நலன்களும் விளையும் என்று கூறி முடிக்கின்றது.