பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 57 திவ்விய தேவியின் கதை பிருகு முனிவரின் வழியில் 'சயவனன் என்ற முனிவன் தோன்றினார். நிறைந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்று நினைத்தார். அதைப் பெறுவதற்குரிய சிறந்த வழி தீர்த்த யாத்திரை செல்வதுதான் என்ற முடிவுக்கு வந்தார். பல ஊர்கட்குச் சென்று பல தீர்த்தங்களில் நீராடி விட்டு நர்மதை ஆற்றின் தென்கரையில் உள்ள அமரகந்தகா என்ற ஊரின் எல்லையில் உள்ள ஒர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்பொழுது அம்மரத்தின் கிளைகளில் ஒரு கிளிக் குடும்பம் வசித்து வந்தது. ஆண் கிளியின் பெயர் குஞ்சலா. இக்கிளி தன் மனைவி, நான்கு மகன் கிளிகளுடன் வசித்து வந்தது. பிள்ளைகளுள் மூத்த கிளியாகிய "உஞ்வலா காலை இரை தேடச் சென்று தாய் தந்தையருக்கு வேண்டுமான இரையைத் தேடிக் கொண்டு மாலை வரும். அந்த உணவை மற்ற கிளிகள் பகிர்ந்து சாப்பிடும். சயவன முனிவர் அங்கு தங்கியிருந்த நேரத்தில் மேலே உள்ள கிளிக் குடும்பத்தில் நடந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது. குஞ்சலா கிளி தந்தை): மகனே உஞ்வலா! இன்று எங்கு இரை தேடப் போயிருந்தாய்? உஞ்வலா : தந்தையே! பிளக்ஷத்தீவு என்ற பகுதிக்குத் தான் நான் இரைதேடச் செல்வது வழக்கம். அதை ஆள்கின்ற மன்னன் திவோதசா என்பவன் ஆவான். அவனுக்கு திவ்ய தேவி என்ற ஒரு அழகான பெண் இருந்தாள். அவளுக்குத் திருமணம் செய்ய ரூபா நாட்டின் அரசன் சித்ரசேனனைத் தேர்ந்தெடுத்தார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்குரிய சடங்கும் நடந்தது. இது நடந்த சில நாட்களில் சித்ரசேனன் இறந்து விட்டான். அடுத்து ரூபசேனன் என்ற மன்னனை நிச்சயித்துச் சடங்குகள் நடைபெற்றன. திருமணத் தேதிக்குள்