பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 69 இது நடைபெறுகின்ற காலத்தில் நகுஷன் பிறக்கவே இல்லை. அயு என்ற அரசனுக்கும் இந்துமதி என்ற அரசிக்கும் பிறந்தவன் நகுஷன். நகுஷன் தன்னைக் கொல்லப் பிறந்தவன் என்பதனை அறிந்த ஹீண்டா அந்த இளம் பிள்ளையைக் கடத்திச் சென்றுவிட்டான். தன் வீட்டில் சமையல் செய்யும் பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்துச் சமைக்கச் சொன்னான். குழந்தைமேல் இரக்கப்பட்ட அவள் மான் கறியை சமைத்து ஹீண்டாவிற்குக் கொடுத்துவிட்டு, குழந்தையை எடுத்துச் சென்று வசிட்டரிடம் ஒப்படைத்தாள். ஒர் அரசனுக்கு வேண்டிய அனைத்துக் கலைகளையும், ஆயுதப் பிரயோகங் களையும் வசிட்டர் நகுவுனுக்குக் கற்பித்தார். எதைக் கண்டாலும் பயந்து கொண்டிருந்த குழந்தைக்கு ந + ஹவுன் = நகுஷன் (அச்சமில்லாதவன்) என்ற பெயரைத் தந்தார். நாளாவட்டத்தில் நகுஷன் பெரியவனாக அசோகசுந்தரியைத் திருமணம் செய்துகொண்டான். அவளை அடைவதற்காகச் செய்த போரில் ஹீண்டாவைக் கொன்றுவிட்டான். நகுஷனுக்கும், அசோகசுந்தரிக்கும் பிறந்த குழந்தைதான் பிரசித்தி பெற்ற யயாதி ஆவான். இறந்து போன ஹீண்டாவின் மகன் விகுண்டன் பெரியவனாகி தன் தந்தையைக் கொன்ற நகுவடினைக் கொல்வதற்காக சக்தி பெற விஷ்ணுவைக் குறித்துத் தவம் புரிந்தான். அத் தவம் பலித்தால் அதனால் ஏற்படப் போகும் பெரிய பிரச்சனை கருதி விஷ்ணுவே தவத்தைக் கலைக்கப் புறப்பட்டார். ஒர் அழகிய பெண் வடிவை எடுத்துக் கொண்டு நடமாடினார். அந்தப் பெண்ணின் அழகைக் கண்ட விகுண்டன், அவள் தன்னை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டினான். அப்பெண் 'தடையொன்று மில்லை. ஆனால் ஏழுகோடி கமோடா பூக்களைக் கொண்டு