பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பதினெண் புராணங்கள் சிவனை அருச்சித்துவிட்டு அதை ஒரு மாலையாகக் கட்டி என் கையில் கொடுத்தால் உன்னை மணந்து கொள்வேன்' என்றாள். சரி என்று ஒப்புக்கொண்ட விகுண்டன் கமோடா புஷ்பங்களைத் தேடினான். காட்டில் அப்படி ஒரு பூ இல்லை என்று அறிந்து கொண்ட நிலையில், தன் குல குருவான சுக்ராச்சாரியாரை நாடினான். அவர் இது மண்ணில் பூக்கும் பூ அன்று என்று கூறிவிட்டு, 'பாற்கடல் கடைந்த பொழுது வெளிவந்தவள் கமோதா என்ற பெண். இவள் கங்கைக் கரையில் உள்ளாள். இவள் சிரித்தால், இவள் சிரிப்பிலிருந்து மஞ்சள் நிறமுடைய கமோதா பூக்கள் தோன்றும். அதைச் சிவனுக்கு அர்ச்சித்தால் நினைத்ததெல்லாம் கைகூடும். ஆனால் அப்பெண் அழுதால் மணமில்லாத சிவந்த பூக்கள் வெளிவரும். அதைத் தொடவே கூடாது என்றார். கங்கைக் கரையில் கமோதாவைத் தேடிச் செல்லப் புறப்பட்டான், விகுண்டன். நாரதர் எதிரே வந்து, நீ அவள் இருக்கும் இடம் தேடிச் செல்ல வேண்டாம். அவளிடமிருந்து வரும் பூக்கள் கங்கையில் மிதந்து வரும். அவற்றை எடுத்து நீ சிவனுக்கு அர்ச்சித்தால் அது போதும்! என்று கூறினார். விகுண்டன் அதை ஏற்றுக் கொண்டவுடன் நாரதர் கமோதாவிடம் சென்று 'விஷ்ணு உலகத்தில் சென்று பிறக்கப் போகிறார் என்று கூறிவிட்டார். அதைக் கேட்ட கமோதா, விஷ்ணு அவருடைய லோகத்தில் இருந்து பூலோகம் போகிறார் என்பதைக் கேட்டு, கண்ணிர் சிந்தி அழலானாள். கங்கையில் வந்த பூக்களை எடுத்து சிவ பூசை செய்யத் துவங்கிய விகுண்டன் சுக்ராச்சாரியார் சொன்னதை மறந்துவிட்டான். பூக்கள் கங்கையில் வருவதைப் பார்த்து மகிழ்ந்த அவன், இது கமோதாவின் அழுகையில் பிறந்ததா, சிரிப்பில் பிறந்ததா