பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலர்ந்தால் அவனும் வாழ்விழந்து போவன் என்ற உலகியல் உண்மையை, விறலி உணர்ந்திருந்தமையால், களங்காய்க் கண்ணியானத், தான்் .ெ ச ன்று காண்பதற்கு முன்னரே, அவன் கேடுற்றுப் போய்விடுவனே என்று எண்ணிக் கவலை கொண்டாள்; சற்றுமுன் மகிழ்ச்சிக்குறிகாட்டிய அவள் முகம், திடுமெனக்கவலையில் தோய்ந்து விட்டதையும், அவள் கண்ணுேக்கு, உன்னத்தில் சென்றிருப்பதையும் கண்ட புலவர்க்கு, அவள் மனத்தடுமாற்றம் புலனுயிற்று. அதனுல், விறலியை நோக்கிப் பின்வருமாறு கூறினர்.

'விறலி! உன்னம் கரிந்துகாட்டுகிறது என்பது உண்மை: உன்னம் கரியின் மன்னர்க்குக் கேடாம் என்பதே உலகியலாம் என்பதும் உ ண் ைம ; ஆனால் களங்காய்க்கண்ணியான், உன்னம் காட்டும் நிமித்தத்தையும் மாற்றவல்ல ஆற்றல் வாய்ந்தவனுவன். அவன் ஆற்றல் புலப்படுத்தும் சில அரிய நிகழ்ச்சிகளைக் கூறுகிறேன். கேட்பாயாக! நார்முடிச்சேரல் நனிஇளையணுய் இ ரு க் கும் போது, சேரர்குலத்தோடு தொடர்புடையவராக மதித்து, அச்சேசர்க்குரிய பனந்தோட்டு மாலையை அணிந்து கொண்ட மன்னர் சிலர், அப்பனந்தோட்டோடு, சேரர்க்குரிய முடியையும் கைப்பற்றிக்கொண்டனர்; ஆண்டுகள் பல கழிந்தன; களங்காய்க்கண்ணியான் வளர்ந்து கட்டிளம் பருவத்தணுயினன்; அந்நிலையில் சேரகுலத்தவர்க்கும் சேரநாட்டு அரியணைக்கும் நேர்ந்த சீர்கேட்டினை அறிந்தான்்; அவ்வளவே, என்குலத்தவர்க்குரிய கண்ணியையும் முடியையும் கைப்பற்றும் வரை, களங்காய்க்காய்க்கண்ணியும், நார்முடியுமே, நான்குடும் கண்ணியும் முடியும் ஆகுக, என வஞ்சினம் உரைத்து, அவற்றை மீட்கலாம் வழிவகைகளை வகுக்கத் தலைப்பட்டான். தன் நாற்படையை நனிமிகப்பெருக்கினன். தன்படையில் பணிபுரிவார் அனைவரும் போர்ப் புண்பெற்ற புகழ்மிகு தோள் பெற்றவராதல் வேண்டும் என

77