பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யொலியும், வலம்புரிச் சங்கொலியும், அணைகளையும் கரைகளை யும், மதகுகளையும் உடைத்துக் கொண்டு ஒடுங்கால் எழுப்பும் பேரொலிகளாக, அவன் நாற்படைச் செலவு, காவிரிப் பெருக்கின் செலவாகவே புலப்பட்டது புலவர் பரணர்க்கு. கண்டார் அஞ்சும் காட்சியுடையவாய்ச் செல்லும் அந்நாற் படை, மலையரண் உடையேம்; கடல் அரண் உடையேம்; காட்டரண் உடையேம்; ஆதலின் எம்மை வென்று கடப்பாரும் உளரோ? "எனத் த ரு க் கி த் திரியும் பகைவர்களின் பற்றற்கரிய அப்பேரரண்கள் அனைத்தையும் அறவே அழித்து, அவரகத்தே பொங்கி எழுந்த பகையாகிய பெருந்தீயை இல்லாமற்பண்ணி விடுவதால், அவியாப் பெருநெருப்பையும் அவித்துப் போக்கவல்ல பெருவெள்ளத்தோடு, தொழிலாலும் ஒருமைப்பாடுடையதாதல் அறிந்து பாராட்டினர். 4.

செங்குட்டுவன் நாற்படைச் செல்வத்தின்பால் சென்ற சிந்தையுடையராய், அப்படை பகைநாடு புகுந்து பாடி கொள்ளும் பாசறை சிலவற்றிற்கும் சென்றிருந்தமையால், புலவர்க்குச், செங்குட்டுவனின் பாசறை வாழ்க்கைநிலையினை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. "பற்றற்கரிய பேரரண்களையும் பாழாக்கவல்ல, வெள்ளம்போல் பரந்த பெரும்படையுடையேன் என்பதை அறிந்தும், என் அடிபணிய மறுக்கும் பகைவரும் உளரோ?’ என்ற சினம் மிகுதியால், அவரை வென்று அடக்கும்வரை வாள்கைவிடேன் என வஞ்சினம் வழங்கிக், காலமெல்லாம் பாசறை வாழ்க்கையே. மேற்கொண்டிருக்கும் அவன், வெற்றிமுரசும், வலம்புரிச் சங்கும், போர்ப்பறையும் ஓயாது முழங்கி, ஆங்குள்ளாரை உறங்கவிடாவாக, அவை ஒலிஅடங்கும் சிறுபொழுது மட்டுமே, சிறுதுயில் கொள்ள நேரும். அச்சிறுதுயில் பெறும் வாய்ப்பு, செங்குட்டுவன் படைவீரர்க்காவது வாய்க்கும்; செங்குட்டுவனுக்கு அதுதான்ும் வாய்க்காது. ஒலிஅவிந்து

7 97