பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைவீரர்க்குத் தலைமை தாங்கும் தான்், எவ்வளவுதான்் ஆற்றல் மிகுந்தவளுயினும், அவர் துணையில்லாமல் தான்் மட்டும் தனித்துக் களம் புகுவது இயலாது.ஆதலின், தன் வெற்றிக்கும், வீர வாழ்விற்கும் அ வ ரே காரணமாவர். ஆகவே, அவர்களை வளமார் வாழ்வில், மனம் நிறைப் பெரு வாழ்வில் வாழ்விக்க வேண்டுவது தன் இன்றியமையாக் கடமையாம் என்றும் அறிந்திருந்தான்். அதல்ை அவர்க்கு மனம் மகிழ்வூட்ட என்றே, மது இல்லங்களை ஆங்காங்கே திறந்துவைத்திருந்தான்். தனிமது சுவைதராது ஆதலின், அது உண்பார்க்கு உதவுக என, ந வி ன் சுவையை மிகுவிக்கும் இஞ்சியும், மனம் நிறைவூட்டும் மணம் தரு மலர்களும் கலந்து கட்டிய மாலை சூட்டப் பெற்ற குடங்களில் மதுவை ஊற்றி, அம்மது புளிப்பேறிப் பொங்கி வழிதற்கு ஏற்ப, அதைத் தாங்கிக்கிடக்கும் குடங்கள், தாமே ஆடியசையு மளவு புளிப்பேறப் பண்ணி, நீலமணியின் நிறம் பெறுமளவு வடித்து வடித்துத் தெளிவித்த அம்மதுவில், தனக்கென ஒரு சிறிதான்ும் வைத்துக்கொள்ளாது, அனைத்தையும் அவ்வீரர்க்கே வழங்கி வந்தான்்.

அவ்வாறு, தன்வளம் பெருக்கும் விழுமிய துணைவராய தன்படை வீரர்களைப் பேணிப்புரக்கும் பெருங்கடமையைச் செய்துமுடித்த பின்னர், அவர்கள் துணைசெய்ய அமர்புரிந்து கொணர்ந்த, பகை நாட்டுக் குதிரைகள்போலும் பொருட் குவியலைத் தன் அரண்மனை வாயிற்கண் நின்று, ஆடியும் பாடியும், தன் புகழ்பரப்பும் கூத்தர் முதலாம் இரவலர்க்கு எடுத்து எடுத்து வழங்கினன். அவ்வாறு வழங்கிய பொருள் களுள், அவன் கொடுத்த குதிரைகள் தாம் எவ்வளவு இருக்கும் என்பதை, எண்ணிப்பார்க்க முயன்றார் பரணர். ஆனல் அது அவரால் இயலவில்லை. அளித்த குதிரைகள் அத்துனைப் பலவாம். பாணரும், பொருநரும் கொண்டு செல்ல,

35