பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு கெடாவாறு கா க்க வல்ல அறிவுநலம் பெற்றும் விளங்கினமையால், தம்மை எதிர்த்துத் தம் நாட்டின் மீது போர்தொடுப்பார் எவரும் இன்மையால், தம் நாட்டு நாற்புற எல்லைகளை முள்ளிட்டு அடைத்து காக்க வேண்டாமையாம் விழுச்சிறப்பும், தம்மைப் பகைத்து எழுவார் ஒரோ வழி உளரா யினும், அப்பகைவர் எறியும் படைக்கலங்களின் விரைவு வன்மைகளைத், தாமே தாங்கித் தகர்த்து அழிக்கவல்ல கேடயம் முதலாம் படை நலங்களும் ஒருங்கே வாய்க்கப் பெற்றுப் பேரரசு செலுத்திய மன்னர் மன்னர் எண்ணிலாதவரைக் கண்டு பாராட்டியுள்ளார் பரணர். அத்தகைய பேரரசர்களிலும், செங் குட்டுவனுக்கு நிகரானவர் ஒருவரும் இலர் என்பதை, அவன் பெற்ற அப்புதுவெற்றி, பரணர்க்குப் புலப்படுத்திவிட்டது

கடம்பர் என்ற கடற்கொள்ளைக் கூட்டத்தவர், சேர நாட்டின் செல்வப்பெருக்கிற்குத் துணைபுரியும், வாணிக வாழ்க்கை குறித்து வரும் வங்கங்களை வழிப்பறி புரிவது அறிந்து, அவர்களை அழிக்கத் துணிந்த செங்குட்டுவன், மழை மேகம் குடிப்பதால் குறைந்து விடுவதோ, மழைவெள்ளம் புகுவதால் மிகுவதோ செய்யாது, எந்நிலையிலும் தன்னிலை திரியாத் தகைமையுடையதும், எதிர்ப்படும் எப்பொருள்களை யும் மோதி வீழ்த்தவல்ல பெருங்காற்று எழுப்பும் அலைகளின் ஒசை அடங்கா ஆற்றல் வாய்ந்ததுமான, கடல் இடையே வாழ்பவர் அக்கடம்பர்; அத்தகையாரை அழிப்பது ஒருபுறம் இருக்க, அக்கடலைக் கடப்பது எவ்வாறு என எண்ணிச் சிறிதும் இடர்ப்படாமல், தன் வேற்படையோடுகூடிய கடற்படைத் துணையால் அக்கடலையும் கடந்து, அக்கடம்பரையும் அழித்து அழியாப்புகழ் கொண்டான். அத்தகு செயற்கரும் செயல் ஆற்றிய அவனுக்கு நிகராகக் கூறத்தக்கவர், அவனுக்கு முன் வாழ்ந்த அவ்வேந்தர்களிலும் ஒருவரும் இலர் என்றால், அவனுக்குப் பின்னும் அவ னுக் கு நிகராவார் பிறத்தல்

62