பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேடித்திரட்டவும் தெரிந்திருந்தரன். திரைகடல் ஒடியும் திரவியம் தேடு எனும் வழிகாட்டும் வாய்மொழியை அறிந்திருந்தான்் போலும் குளிர் மிகுக்கும் காற்றடிக்கும் கடற்கரை வாழ்க்கையர் ஆகிவிட்ட காரணத்தால், தம் வளத்திற்கு அக்கடலேயே நம்பி, அக்கடலையே உழுது, உப்பும் உறுமினும் கொண்டு உயிர்வாழும், கடல்நாட்டவராகிய பரதவர்போல், கடலும் கலங்குமாறு கலங்களைப்போக்கி, அக்கடலைக் கடந்து போய், கடம்பர்வாழ் தீவுகளை அ ைட ந் து, அவர்களை வென்றழித்து, வாணிகவங்களை வழிமடக்கிக் கொள்ளையிட்டுக் குவித்து வைத்திருந்த அவர்தம் மலைநிகர் மாநிதிகளை வாரிக் கொணர்ந்து வளம் பெருக்கினன்' என்பாரும்,

'செருமேற்கொண்டு சென்ற செங்குட்டுவன், செல்வப் பெருக்கோடு வந்து சேர்ந்துவிட்டான் என்பதைப், பாடிப் பிழைக்கும் பரிசிலர் அறிந்து கொண்டதும், அரண்மனை வாயிற்கண் வந்து குவித்துவிடுவர்; அவன் கொற்றம் கொடை, அன்பு, அருள், ஆட்சித்திறம், அறிவுத்தெளிவு ஆகிய அவன் பெருமைகள், அனைத்தையும் தம்பாவிடை வைத்துப் பாராட்டத் தொடங்கிவிடுவர். அவ்வாறு அன்னர் பாடும்பாக்கள் அளவிறந்து பெருகிவிடும். ஆனல் அவன். புகழோ, பாடிமுடியாது; அவர்கள் பாடப்பாட, அவன் புகழ் பெருக்கிக்கொண்டே போகுமாதிலின், அவர்கள் எவ்வளவு தான்் பாடினும், அந்நிலையிலும், அவன் புகழில் பெரும்பகுதி பாடப்பெருமலே கிடக்கும். (அவன் புகழின் பெருக்கம், அவர் தம் பாடும் ஆற்றலை என்று ம் குறையுடையதாகவே வைத்திருக்கும். அத்தகு குறை, தம்பால் இருப்பினும், அவன்பால், பொருள் வேண்டிவருவதை அவர்களும் கை விடுவார் அல்லர். வரிசை வரிசையாக வந்து, ஒருவர். பின், ஒருவராக நின்று கையேந்தி நிற்பார் ஒவ்வொருவர்க்கும் உறுபொருள் அளிப்பதை அவனும் கைவிடுவான் அல்லன்.

6 $1