பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 13

"ஒரு திசை ஒருவனை உள்ளி... என்ற பாடலின் மூலம் அவன் தவ்றை அவனுக்கு உணர்த்தினார். - -

ஆரிய அரசர்கள் அக்காலத்தில் தமிழர்களின் தகுதி அறியாமல் இருந்தனர். ஆரிய அரசன் பிரகத்தி னுக்கு தமிழின் அருன்மயை அறிவிக்க குறிஞ்சிப் பாட்டு என்ற நீண்ட பாடலைப் பாடிக் காட்டினார். குறிஞ்சிக்குக் கபிலன் என்ற சிறப்பையும் பெற்றார்.

பேகன், விச்சிக்கோன், இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன் முதலியோர் பால் கபிலர் நேரில் சென்று பாடிப் - பழகியுள்ளார். பாரிக்கும் கபிலருக்கும் இை டயில் இருந்த நட்பு புலவர்கள் பாராட்டும் சிறப்புடையது. - - -

பாரியின் கொடை வளத்தைக் கண்டு பழகிய கபிலர் கொடைத்திறத்தில் அவனுக்கு நிகர் அவனே. இவ்வுலகில் எவரும் அவனுக்கு நிகராகார் என்பதை உணர்ந்து அவன் புகழை ஒர் அழகிய சிறு செய்யுளால் பாராட்டு வாராயினர்.

பாரி பாரி என்று பல் ஏத்தி ஒருவற் புகழ்வர் செக்காப் புலவர்: பாரி ஒருவனும் அல்லன்: - ம்ாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே."

- .புறம் 107

சொல்லால் இகழ்வது போல் காட்டிப் பொருளால் புகழ் தோன்றப் பாடிய பெரும் புலமை உடையவர் கபிலர். பாரி மறைந்த பிறகும் அவன் மகளிரைக் காக்கும் கடமையை மேற்கொண்டு நட்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் கபிலர். செல்வக் கடுங்கோ வாழியாதனின் சிறப்பை அறிந்து அவனுடன் தங்கியிருந்து அவன் பெருமை.